பக்கம்:பேசாத நாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zo பேசாத நாள்

கொண்டிருக்கும். அந்த ஊருக்குப் பேர் ஆமாத்துார். அதுதான் கம்முடைய ஊர்” என்ருர்,

அவர் பேசப் பேச கான் பாவை போலச் சமைந்து போய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லே. அவர் பேசினலே போதும்; இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவர் பேச்சிலே என்னை மறந்து கேட்டிருந்தேன். "ஆமாத்துரர் தான் நம்முடைய ஊர்” என்று சொன்னவர் மேலே ஒன்றும் சொல்லாமல் உடனே போய்விட்டார்.

போன பிறகு பார்க்கிறேன்; அவரைக் காணவில்லை. சுவாமி வந்தார், போளுர் என்பதைத் தவிர நான் வேறு என்ன சொல்வது? அவரிடம் நான் இன்னும் காலு வார்த்தைகள் பேசியிருக்கக்கூடாதா? சற்றுத் தங்கிச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாகாதா? அவர்தாம் இன்னும் கொஞ்சம் இருந்து, நீ யார் என்று என்னைக் கேட்டிருக்கக்கூடாதா? -

இன்று நான் இவ்வாறு எண்ணி எண்ணி ஏங்கு கிறேன். ஆல்ை அன்று அவரைக் கண்டேனே, அது என் தவப் பயன் அல்லவா? அவரோடு துணிந்து பேசினேனே, அது என் பாக்கியம் அல்லவா? அவர் என் வீட்டுக்கு வந்தாரே, அது பெருப் பேறு அல்லவா? வந்ததோடு, என்னே நுட்ங்கேரிடை மடவாய் என்று

அழைத்தாரே, அது ஒன்றே போதுமே என் உயிரில் இனிமையை ஊட்ட தம் ஊர் இன்னதென்று சொன்னரே, அதை வைத்துக்கொண்டு மேலே முயற்சி செய்து அவர் இன்னருளேப் பெறலாம் அல்லவா?

மாத்துர்ப்பெருமானேக் கண்ட இளம் பெண் தன் உள்ளத்திலும் உயிரிலும் ஊடுருவிப் புக்க அந்தக் காட் . சியை எண்ணி எண்ணி இன்புற்றும் ஏங்கியும் நிற்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/26&oldid=610084" இலிருந்து மீள்விக்கப்பட்டது