பக்கம்:பேசாத நாள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து போர்ை 21

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை

விரிசடைமேல் தாம்சூடி விணே ஏந்திக்

கந்தாரம் தாம்முரலாப் போகா நிற்கக்

கறைசேர் மணிமிடற்றிர் ஊர்ஏது என்றேன்;

நொந்தார்போல் வந்தெனது இல்லே புக்கு, *

துடங்கு ஏர் இடைமடவாய் நம்ஊர் கேட்கில்,

அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்

ஆமாத்துார் என்று அடிகள் போயி ஞரே.

(நன்ருக வெந்து வெண்மை கிரம்பிய வெள்ளிய திருநீற்றைப் பூசி, வெள்ளே மலர் மாலேயைத் தம்முடைய விரிந்த சடையின் மேல் அணிந்துகொண்டு, வீணேயைக் கையில் ஏந்திக் காக்தாரப் பண்ணேப் பாடியபடியே திருவீதியில் போக, அவரை அணுகி, 'கறுப்பு வண்ணம் சேர்ந்த அழகிய கழுத்தை உடையவரே, தேவரீருடைய ஊர் எது?" என்று கேட்டேன்; பல இடங்களுக்குச் சென்று வருக்கியவரைப் போல வங்து என் இல்லத்திற் புகுந்து, "தளரும் அழகையுடைய இடையைப் பெற்ற பெண்ணே, நம்முடைய ஊரைக் கேட்டால், அழகிய தாமரை மலர்களின் மேல் அன்பையுடைய வண்டுகள் யாழைப் போன்ற இசையை ஒலிக்கும் ஆமாத்துனர் ஆகும்” என்று கூறி அப்பெரியார் போய்விட்டார். - W

வெந்து ஆர்.வெந்து நிறம் கிரம்பிய வெந்தாருடைய வெண்பொடி என்று கொண்டு, மயானத்தில் வெந்த வர்களுடைய வெண்பொடியை என்றும் பொருள் சொல்லலாம். வெள்ளே மாலை.தும்பை முதலிய மலர்களால் அமைந்த மாலை: வெண்டல்ே மாலையுமாம். கந்தாரம்-காத்தாரம், எதுகையை நோக்கிக் குறுகியது. முரலா-பாடி. போகா கிற்க-போய்க் கொண்டிருக்க கறை-கறுப்பு. மணி.அழகு. மிடறு.கழுத்து. நுடங்கு-தளரும். ஏர்-அழகு அளி-அன்பு அளியும் வண்டு மாகிய வண்டினங்கள் என்றும் சொல்லலாம். அடிகள்-சுவாமி, பெரியார்; துடிவிகளையும் கடவுளரையும் மதிப்புடைய பெரி யோரையும் அடிகள் என்பது வழக்கு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/27&oldid=610085" இலிருந்து மீள்விக்கப்பட்டது