பக்கம்:பேசாத நாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருகாவூர் எந்தை

சோழ நாட்டில் பாபநாசம் என்னும் ஊருக்கு அருகில் வெட்டாறு என்ற ஆற்றின் கரையில் திருக் கருகாவூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது திருக் களாவூர் என்று அதை வழங்குகிருர்கள். அத் தலத்தில் அம்பிகை கருவுற்றிருந்த பெண்மணி ஒருத்தியைப் பாது காத்து அவள் கருவைக் காத்து மருத்துவம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. கருவைக் காத்த ஊராதலின் கருகாவூர் என்ற திருநாமம் அதற்கு உண்டாயிற்று. அம்பிகைக்குக் கருக்காத்த நாயகி என்றும், கர்ப்ப ரகடிகி யம்பிகை என்றும் திருகாமங்கள் அமைந்தன. s

கருகாவூருக்குத் திருகாவுக்கரசர் சென்று இந்த வர லாற்றை யெல்லாம் கேட்டார். இறைவி கருவைக் காத்த ஊர் என்பதைக் கேட்டபோது அவருடைய சிங்தை இறை வனுடைய திருவருட் பெருமையிலே ஆழ்ந்தது. அம்பிகை இறைவனுடைய திருவருளின் உருவந்தானே? கருத் தோன்றி வளர்ந்து உருவாகி மேலும் அவ்வுரு வளர் கிறது. எல்லா கிலேகளிலும் இறைவனே காப்பாற்று கிருன் உலகமெல்லாம் உருவாவதற்கு முன்னே அது இறைவனுடைய திருவுள்ளத்திலே கருவாய் இருக்கிறது. அந்தக் கரு இறைவனிடத்திலே தோன்றி வளர்ந்து உலகா கிறது. உலகம் தோன்றுவதற்கு முன்னே, தான் அருளுடன் வெளிப்பட்டு உலகை வெளிப்படுத்துகிருன். அதல்ை உலகுக்கு அவனேயே கரு என்று சொல்லிவிட லாம். உலகுக்கு முன்னே தோன்றும் கருவாகிய எம் பெருமான் அவ்வுலகம் வளர வளர உயிர்களுக்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/29&oldid=610087" இலிருந்து மீள்விக்கப்பட்டது