பக்கம்:பேசாத நாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名孕 பேசாத நாள்

வாழ வழி காட்டுகிருன்; கண்ணேப்போல கின்று வழி காட்டுகிருன். o -

கருகாவூர் என்ற ஊரின் வரலாற்ருேடு இந்த எண் ணங்கள் நாவுக்கரசர் கருத்திலே தோன்றின.

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்

கண்ணும் கருகாவூர் எந்தை தானே

என்ற அடி உருவாயிற்று.

Ж.

உலகம் தோன்றுவதற்கு முன்னே உள்ளவன் இறை வன். அதனால் அவன் மிகப் பழையவன். பழைய பொருள்கள் காலம் ஆக ஆகப் பயனற்றுப் போவது உண்டு. இறைவன் பழைய பொருளாதலால் பயனற்ற பொருளாகி விட்டானே? இல்லே, இல்லை. அவன் அன் றும் பயனுள்ளவகை இருந்தான் இன்றும் பயன் தரும் பொருளாக இருக்கிருன்; இனியும் இருப்பான். பழமைக் குப் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் இருக் கும் கித்தியப் பொருள் அவன்.

முன்னே ப் பழம்பொருட்கும்

முன்னேப் பழம்பொருளே பின்னேப் புதுமைக்கும் * பேர்த்தும்அப் பெற்றியனே' என்று மணிவாசகர் பாடினர்.

இறைவன் காலம் கடந்தவன் காலத்தைத் தந்தவன்; காலமாகவே இருப்பவன். பழமையும் அவன்தான்; புதுமையும் அவன்தான். இந்த இரண்டும் அவனிடம் உள் ளன. அது எப்படி? ; , , . - பழைய ஆலமரம் ஒன்று பல ஆண்டுகளாக வளர்ந்து படர்ந்து வேரோடி வீழ்து இறங்கி நிற்கிறது. அது பழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/30&oldid=610088" இலிருந்து மீள்விக்கப்பட்டது