பக்கம்:பேசாத நாள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருகாவூர் எங்தை 25

யதுதான். ஆயினும் அதில் புதுமை இல்லாமற் போக வில்லை. அது வளர்ந்துகொண்டே யிருக்கும் மரமாதலின் ஒவ்வொரு நாளும் அதில் புதுமை தோன்றுகிறது. அத னிடத்தே தோன்றும் தளிர் புதுமையின் அறிகுறி. மரத்தி னுரடே உள்ள வயிரம் பழமையின் அறிகுறி காட்பட்ட காட்பட மரத்தில் வயிரம் பாயும். ஆலமரத்தில் தளிரின் வடிவத்தில் புதுமையும் வயிரத்தின் வடிவத்தில் பழமையும் இருக்கின்றன. இறைவன் தளிர் அல்லது குருத்தாகவும் இருக்கிருன்: வயிரமாகவும் இருக்கிருன். வயிரம் காலத் தின் ஓர் எல்லேக் கோட்டுக்கு அடையாளம், குருத்து மற் ருேர் எல்லேக் கோட்டுக்கு அடையாளம். இரண்டு எல்லே யாகவும் இருக்கிருன் இறைவன். ஆதலால் அவனைக் குருத்தென்றும் வயிரமென்றும் கூறுகிருர் அப்பர் சுவாமிகள்.

குருகாம், வயிரமாம்.

அப்பர் உணர்ச்சியிலே மிதந்து பாடுகிருர். அவர் பெரிய அன்பராக இருப்பதோடன்றிச் சிறந்த கவிஞராக வும் இருக்கிருர். பழைய பொருள், புதிய பொருள் என் ருல் உள்ளம் கவ்வாது. அதையே உருவுள்ள பொரு ளோடு ஒட்டிக் காட்டினல் மனத்திலே நன்கு பதியும். அவ்வாறு பதிய வைக்கிறது கவிஞனுடைய கலையின் ஆற் றல். அப்பர் என்ற கவிஞர் காலமென்னும் மரத்தின் ஓர் எல்லேயை, "இதோ பார் குருத்து, இது இறைவன்" என்று காட்டிவிட்டு, மற்ருேர் எல்லையை, 'இதோ உள்ளே ஊடுருவிப் பார்; வயிரம்; இதுவும் இறைவனே' என்று காட்டுகிரு.ர். -

. இந்த இரண்டு எல்லேக்கும் இடையே காலத்தைத் துண்டு போட்டுக் கணக்கு வைத்துக் கொள்கிருேம். கணம், விநாடி, நாழிகை, முகூர்த்தம், நாள், பசும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/31&oldid=610089" இலிருந்து மீள்விக்கப்பட்டது