பக்கம்:பேசாத நாள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பேசாத காள்

மாதம், ஆண்டு, யுகம் என்று வருவது பழைய கணக்கு. செகண்டு, கிமிஷம், மணி, தேதி, மாதம், ஆண்டு, நூற் ருண்டு என்று வருவது புதிய கணக்கு இந்தக் காலப் பகுதிகள் அவ்வளவும் இறைவன்தான்.

ஞால மேபிற வேஅவை வந்துபோம் காலமே”

என்று மாணிக்கவாசகர் பாடுகிறர்.

அந்தக் காலக் கணக்கிற் சில அப்பர் சுவாமிகளுக்கு கினேவுக்கு வருகின்றன. முதலில் நாளே கினேக்கிருர். நாள் என்பது நட்சத்திரம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் தலைமை பெற்று வானத்தில் தோற்றுகிறது. அதல்ை நாளே கட்சத்திரத்தினுல் குறிப்பது வழக்கம். இறைவன் அந்த நாளாக இருக்கிருன். - -

ஏழு நாள் சேர்ந்ததை வாரம் என்று சொல்கிருேம். அதைப் பழங்காலத்தில் கிழமை என்று சொன்னர்கள். இப்போதும் யாழ்ப்பாணத்தில் வாரத்தைக் கிழமை யென்றே குறிக்கிருர்கள். இறைவன் வாரமாகவும் இருக் கிருன். -

'மணி என்ன பாரப்பா என்று கேட்டார் ஒருவர் ஒரு பையனைப் பார்த்து. * , ' -

"பத்துக்கு மேல் ஆயிற்று" என்ருன் பையன். "சின்ன முள் எங்கே இருக்கிறது?" என்று மறுபடி யும் கேட்டார். - - ..., -

"பத்தைத் தாண்டி' என்று விடை வந்தது. "பெரிய முள் எங்கே இருக்கிறது" என்று மறுபடி யும் கேட்டார். -

இரண்டைத் தாண்டி" என்ருன் பையன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/32&oldid=610090" இலிருந்து மீள்விக்கப்பட்டது