பக்கம்:பேசாத நாள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேசாத நாள்

தேனைச் சுவைத்தவன் காக்கைச் சப்புக்கொட்டுவ போன்ற உணர்ச்சி அப்பருக்கு வருகிறது. :

இப்படிக் காலத்திற்குப் புறம்ப்ேயும் உள்ளேயும் இருக்கும் எம்பெருமான் எப்படி இனித்திருக்கிருன் தெரியுமா? இனிமை என்ருலே அதற்கு உவமை அமுதக் தான் என்று உலகம் திட்டம் செய்துவிட்டது. அவன் அமுதமாக இருக்கிருன். ஆல்ை தேவர் உண்ட அமுதமா அது? தேவரால் எள்ளளவும் அநுபவிக்கப் பெருத அமுதம் அது. 'பருக அமுதம்” என்கிரு.ர்.

‘'தேவர் பருகிய அமுதமே எங்களுக்குத் தெரியாதே; பருகாத அமுதம் எப்படித் தெரியப் போகிறது? எங் களுக்குத் தெரிந்ததாக ஒன்று சொல்லுங்கள்" என்று அவரைக் கேட்டுப் பார்த்தால் உடனே, "பாலில் நெய்யாம்' என்று விடையிறுக்கிருர், 'பாவில் கெய் சாரமாக இருக்கும்; சுவையாக இருக்குமா?" என்று சிறிதே ஐயத்தோடு நிற்பதைக் கண்டு, பழத்தின் ரசம்போல இருப்பான்” என்கிருர். -

பருகா அமுதமாம், பாலில் தெய்யாம்,

பழத்தின் இரதமாம். (தேவர்கள் பருகாத அமுதம்போல இருப்பவன்; பாலில் உள்ள நெய்போல இருப்பவன்; பழத்தின் சுவைபோல இருப்பவன். - . -

இரதம்.ரளம்; சுவை. பாலில் கெய்யாக இருக்கிருன், பழத் தின் சுவையாக இருக்கிறன் என்றும் பொருள் கொள்ளலாம்.) "இந்தப் பொருள்களெல்லாம் தெவிட்டிவிடுவன ஆயிற்றே. இறையின்பத்துக்குச் சமானமாகச் சொல்ல லாமா?" என்று யாராவது யோசிக்கலாம் அல்லவா? ஆதலால் இதுவரைக்கும் சொன்னதில் திருப்தி பிறவாமல் பின்னும் மேற்பட்ட ஒன்றைச் சொல்லவேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/34&oldid=610092" இலிருந்து மீள்விக்கப்பட்டது