பக்கம்:பேசாத நாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருகாவூர் எந்தை 29

விரும்புகிருர் அப்பர். வாயாரப் பாடும் பாட்டுக்குப் பண் இனிமை தருகிறதே, அதைச் சொல்கிருர்

பாட்டி தற் பண்ணும். - (இசைப் பாட்டிலே இணைந்து இனிமை தருகின்ற பண்ணேப் போல இருக்கிருன்.) w

காலமே தானக இருக்கும் கடவுள், அன்பர்களுக்கு கெய்யாகவும் ரசமாகவும் பண்ணுகவும் இனிக்கும் கடவுள், தன்னுடைய கருனேயையே ஒரு பாகத்தில் மனேயாட்டி யாக ஏற்றிருக்கிருன். உமையாளே ஒரு கூற்றிலே அமைத்துக்கொண்டு, "என்னிடமிருந்து கருணை விலகா திருக்கும்” என்பதைக் காட்டுகிருன்.

ஒருகால் உமையாள்ஓர் கூறலும் ஆம்.

(ஒரு சமயம் உமையம்மையை ஒர் கூற்றிலே ஏற்றிருப் பவனும் ஆவான். (கூறு - பகுகி.) .

இறைவனுடைய அருளேயே சக்தியாக வழிபடுகிருேம். அவன் தன் அருளினால் அன்பர்கள் நுகரும் பொருளாக கிற்கிருன். அன்பு செய்யாதவர்களுக்குக்கூட அவன் அருள் நன்மையைப் புரிகிறது. இறைவனைப் போற்ருத மனிதனும் உலகில் வாழ்கிருன் துாற்றுகிறவனும் வாழ் கிருன் இறைவன் யாவருக்கும் வேண்டியவற்றைக் கொடுத் தருளி மனிதன் காலில் இருந்துகொண்டு கடக்கச்செய்கிருன்; கையிலிருந்துகொண்டு செயல் செய்யச் செய்கிருன்; கண்ணிலிருந்து காணச் செய்கிருன். -

நன்ருகப் பேசுகிருன் ஒருவன், மற்ருெருவன் ஊமை யாக இருக்கிருன். பேசுகிறவனேப்போலவே ஊமைக்கும் காக்கு இருக்கிறது. ஆனல் ஊமை பேசுவதில்லை. வாயில் உள்ள நாக்கு மட்டும் பேசுவதற்குப் போதுமானதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/35&oldid=610093" இலிருந்து மீள்விக்கப்பட்டது