பக்கம்:பேசாத நாள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பேசாத காள்

இருந்தால் ஊமை பேசவேண்டும். இந்த காக்கைப் பேசும் படி இயக்குவதற்கு அகநாக்கு ஒன்று இருக்கிறது. அது மனத்தின் பகுதி. அகக் கண் என்று ஒன்று இருப்பது போல அக காக்கும் உண்டு; காம் சொல்லும் உள்நாக்கு அன்று அது. அந்த அக நாக்குப் பேசினல் புறநாக்குப் பேசும்.

அகநாக்குக்கூடத் தானே பேசாது. அதை இயக்கு கிறவன் ஒருவன் இருக்கிருன் நாடகம் போடும்போது திரைக்குப் பின்னலிருந்து, கடிப்பவர்களுக்கு அவர்க -ஞடைய பேச்சை அவ்வப்போது சொல்விக்கொடுக்கச் சிலர் இருப்பதுண்டு. அவர்களே உரையாடி (Prompter) என்று சொல்வார்கள். உள்ளே உள்ள அகநாக்குக்கு அப்படி ஒர் உரையாடி உண்டு. அவன்தான் இறைவன். அவன் உரைக்க, அதனை உள் நின்ற காக்கு உரைக்க, அதையே வெளியே உள்ள காக்குச் சொல்கிறது. இறைவன் உள்ளே நின்று உரைக்கும்படி துரண்டாவிட்டால் பேச்சே எழாது. ஆதலின் அவனே உள்ளே கின்ற நாவுக்கு உரையாடியாக இருந்து அருள் செய்கிருன்.

X- உள்நின்ற நாவுக்கு உரையாடி யாம்.

. | உள்ளே நின்ற அகநாக்குக்குச் சொல்லித் தருகின்ற

வம்ை.) - o

உலகுக்கு முன்னே கருவாய்த் தோன்றி. அது வளர வளர யாவற்றையும் காட்டும் கண்ணுக உதவும் கருகாவூர்ப் பெருமான் காலமாகி நிற்கிருன்: அடைந்தார்க்கு இன்பப் பொருளாய் இழைகிருன் அருளோடு இணைந்து விளங்கு கிருன் எல்லோருக்கும் உள் கின்ற நாவுக்கு உரையாடி யாகவும் திகழ்கிருன். இப்படி இறைவனுடைய இயல்பு

களே அமைத்துக் காட்டுகிருர் அப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/36&oldid=610094" இலிருந்து மீள்விக்கப்பட்டது