பக்கம்:பேசாத நாள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து நின்ற தாய்

அவர் எப்போதும் சிவபெருமானேயே எண்ணிப் பேசி வாழ்கிறவர்; இனிய சொற்களையே பேசுகிறவர். அவரு டைய வாக்கிலிருந்து மட்டும் அத்தகைய இனிய சொற்கள் வருவதற்குக் காரணம் என்ன? என்று ஒருவன் யோசித் தான். அவனுக்கு நல்ல வார்த்தைகளேயே பேச வேண்டு மென்று ஆசை. முயன்றும் பார்த்தான். அவனல் முடிய வில்லை. ஐந்து நிமிஷம் பல்லேக் கடித்துக்கொண்டு இனிமை யாகப் பேசுகிருன் ஆல்ை அடுத்த கணத்தில் கடுமையான சொல் வெடித்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.

சிவனடியாரின் இன்சொல்லைக் கேட்ட போதெல்லாம் அவனுக்குப் பொருமை உண்டாயிற்று ‘எப்படி ஐயா இந்தப் பேச்சைக் கற்றுக் கொண்டாய்?" என்று அந்தப் பக்தரையே கேட்டு விட்டான். அவர் சொன்னதைக் கேட்டபோது அந்த மனிதனுக்கு வியப்பாக இருந்தது. அவர் என்ன சொன்னர் தெரியுமா? நான் கற்றுக் கொள்வதாவது! எல்லாம் சிவபெருமானுடைய செயல்” என்ருர், -

"நீ பேசுகிருய். சிவபெருமானுடைய செயல் என்கிருயே!” ... "

"நான் பேசவில்லை. அவன் பேச வைக்கிருன், இந்த வாய் பேசுகிறது. அவனருள் இல்லாவிட்டால் என் காக்கு இயங்காதே." •,

"அப்படியானல் சிவபெருமான் உன் வாயில் இருந்து கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக உனக்குச் சொல்லித் தருகிருளு' ッ - * . ‘. . . x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/38&oldid=610096" இலிருந்து மீள்விக்கப்பட்டது