பக்கம்:பேசாத நாள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8左 பேசாத நாள்

“வாயில் இருப்பவன் என்றும், மனத்திலும் கருத் திலும் இருப்பவன் என்றும், கருத்தை அறிந்து காரியத்தை முடித்துக் கொடுப்பவன் என்றும் சொல்கிருயே; அவன் உருவமே இல்லாத நுண்பொருளா? நம்முடைய கண்ணுக் குப் புலப்ப்டுபவன?”

அடியவருக்கு அவனுடைய உள்ளத்தே ஆராய்ச்சி பிறந்திருப்பது தெரிந்தது. இறைவன் அருள் திரு மேனியை உடையவனாக இருப்பான் என்பதைச் சொன் ல்ை அவன் வணங்கிப் பயன் பெறக்கூடும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்கு ஏற்ற வகையில் இப்போது பேசலானர்.

“ஆம். அப் பெருமானேக் கண்ணுரக் காண இயலும். ஆர்வமும் அன்பும் உடைய அடியார்கள் தம் அகக் கண்ணு லும் புறக் கண்ணுலும் கண்டு களிப்பதற்கு ஏற்ற தூய வடிவத்தை அவன் மேற்கொள்வான். அவன் துரயவன். அவனுடைய திருக்கோலத்தில் தூய்மைக்கு உருவமாகிய வெண்மையான பொருள்களைக் காணலாம். அவனுக்கு ஒரு வாகனம் உண்டு. அது தூய வெள்ளே ஏறு. அவன் திருமுடியில் அணிந்திருப்பது வெண்திங்கள். கண்ணியை அப் பெருமான் சடையில் அணிந்தது போல அந்தச் சுடர்த் திங்கள் காட்சி அளிக்கும்."

தூயானத் துரவெள்ளே ஏற்ருன் தன்னைச்

சுடர்த்திங்கட் சடையானே.

★ - அப் பெருமானுடைய இயல்புகளே இன்னும் சொல் கேட்கிறேன்" என்ருன் கேள்வி கேட்ட மனிதன். இப் போது பக்தரே கேள்வி கேட்கத் தொடங்கினர். - - -

"உனக்கு அன்னே இருக்கிருளா?" - 'இல்லை. இறந்து போய்விட்டாள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/40&oldid=610098" இலிருந்து மீள்விக்கப்பட்டது