பக்கம்:பேசாத நாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து கின்ற தாய் 35

'குழந்தையினிடம் எல்லா அன்னமாரும் அன்பாக இருக்கிருர்களா?”

"குழந்தைப் பருவத்தில் பெரும்பாலோர் அன்பாக இருக்கிருர்கள். குழந்தை பெரியவனகி விட்டால் அந்த அன்பு மாறிவிடுகிறது” என்ருன் அவன். -

'குழந்தை எப்போதும் தாயுடன் இருக்கிறது. அது வளர்ந்து பெரியவனைல் தாய் அந்தக் குழந்தையுடன் இருக்க முடிகிறதா?” என்று பக்தர் கேட்ட்ார்.

"அது எப்படி முடியும்? குழந்தைதான் தாயோடு வளரும், வளர்ந்த பிள்ளை வேலை செய்யப் போகும் இடங்களுக்கெல்லாம் தாய் போக முடியுமா? -

ஆகவே, குழந்தையினிடம் எவ்வளவு அன்புடைய தாயானலும் எப்போதுமே அந்தக் குழந்தையோடு இருக்க முடியாது. எல்லா இடத்துக்கும் தாய் போக முடியாது. தன் ஆயுட்காலம் முடிந்தால் அவள் கிரந்தரமாகத் தன் மகனைப் பிரிந்து விடுகிருள். இவ்வளவும் உண்மைதானே?”

“ஆம்; உண்மை” என்ருன் அந்த மனிதன். அவனுக்கு இப்போது பணிவும் உண்டாயிற்று. - "எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் தொடர்ந்து கிற்கும் தாய் யாரேனும் உண்டா?"

“எப்படி இருக்க முடியும்' "உலகத்துத் தாய்மாரால் அது முடியாத காரியம். ஆனல் எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எவ்விடத்தும் தொடர்ந்து நின்ற தாயாக இருப்பவன் இறைவன்' என்ருர் பக்தர்,

"சற்றே விளக்கியருள வேண்டும்" என்ருன் புதிய அன்பன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/41&oldid=610099" இலிருந்து மீள்விக்கப்பட்டது