பக்கம்:பேசாத நாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பேசாத நாள்

பார்கள். சுகவாழ்வில் இருப்பதால் தேவர்களுக்குச் செருக்கு அதிகம். ஏதேனும் தமக்குக் குறை உண்டானல் இறைவனே அணுகுவார்கள். இறைவனிடம் காரணம் இல்லாத தூய அன்பு அவர்களிடம் இல்லை. அதனால் இறை வனும் அவர்களே நெருங்குவதில்லை. அவர்களுக்கு அரிய வளுகவே இருக்கிருன் - "எல்லாத் தேவர்களுக்கும் அணுகுவதற்கரியவன? அல்லது இந்திரன் முதலிய தலைவர்களுக்கு எளியவகை இருப்பவன?” -

'தலைமைப் பதவி வகிக்கும் தேவாதி தேவர்க்கும் என் றும் சேய்மையில் இருப்பவன் அவன். ஆனல் பக்தர் களுக்கு அணிமையில் இருப்பவன்.”

"என் போன்றவர்கள் அவனைத் தரிசிப்பது எப்படி?” "தென்றமிழ் நாட்டில் கூடல் என்னும் பெயரை உடைய மதுரை இருக்கிறது. அங்குள்ள திருக்கோயி லாகிய திருவாலவாய்க்குச் சென்று கண்டால் இறை வனுடைய உருவத் திருமேனியைக் காணலாம். அந்த உரு வைத் தியானிக்கலாம். அவனடியையே பற்றுக் கோடாகக் கொண்டு சிந்திக்கலாம். எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டியது” என்று கூறினர் சிவனடியார். -

தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானத் தென்கூடல் திருவாலவாய்ச்

சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன். நானே.

இறைவன் அடியார்களின் வாக்கில் நின்று பேசக் செய்பவன்; மனத்தில் கின்று நினைக்கச் செய்பவன்; சினேப்பில் நின்று முயலச் செய்பவன் முயற்சியில் கின்று கருதிய காரியம் கைகூடச் செய்பவன்; தன்னை வழிபடும் அன்பர்கள் அகத்திலும் புறத்திலும் கானும் வண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/44&oldid=610102" இலிருந்து மீள்விக்கப்பட்டது