பக்கம்:பேசாத நாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து சின்ற தாய் 39

ஆாய உருவத் திருமேனி கொண்டு இடபவாகனனகிச் சந்திர சேகரளுகி எழுந்தருள்பவன்; எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வுயிரையும் தொடர்ந்து கின்று உதவும் தாயாக விளங்குபவன்; முயற்சி செய்பவர்களுக்கு நன்மையைத் தரும் தவத்தைப் போன்ற தன்மையை உடையவன்; அடியார்க்கு எளியவகை இருந்தாலும் தேவாதி தேவருக்கு அரியவன். இத்தகையவன் திருவாலவாயில் எழுந்தருளி யிருக்கிருன். - .

இந்தக் கருத்தை வைத்து அப்பர் சுவாமிகள் ஒரு திருத்தாண்டகத்தைப் பாடியருளினர்.

வாயான மனத்தானே மனத்துள் நின்ற

கருத்தானக் கருத்தறிந்து முடிப்பான் தன்சீனத் துாயானத் துரவெள்ளே ஏற்ருன் தன்னைச்

சுடர்த்திங்கட் சடையானத் தொடர்ந்து நின்ற தாயானத் தவம்ஆய தன்மை யானத்

தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானத் தென்கூடல் திருவாலவாய்ச்

சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன். நானே. தாயான் - தூய்மையை உடையவன். சுடர்-நிலவு. தவம் ஆய தன்மையான - தன்மையில் தவமே ஆக இருப்பவனே. தலை ஆய தலைவராகிய, சேயான் - அணுகுதற்கரியவன். கூடல் - மதுரை. திருவாலவாய் என்பது மதுரையில் உள்ள திருக் கோயிலின் கிருநாமம். சிந்தித்தல் - கியானித்தல்.

தொடர்ந்து கின்றென் காயான என்பது ஒரு பாடம். தொடர்ந்து நின்ற என் என்பதன் விகாரமாகக் கொண்டு, தன்னைத் தொடர்ந்து கின்ற எனக்குத் தாய் போல அருள் புரிகிறவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.) -

திருநாவுக்கரசர் மதுரைப் பதிக்குச் சென்றபோது பாடிய பதிகத்தில் உள்ளது. இது ஆருந் திருமுறையில் 19-ஆம் பதிகத்தில் எட்டாம் பாசுரம்ாக அமைந்திருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/45&oldid=610103" இலிருந்து மீள்விக்கப்பட்டது