பக்கம்:பேசாத நாள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிற் பெரியவன்

குழந்தையிடம் அம்மா இறைவனேப்பற்றிச் சொல்லி யிருக்கிருள். எல்லோரையும்விட இறைவன் அறிவிலே சிறந்தவன் என்பதை ஒருநாள் சொன்னள். குழந்தைக்கு அறிவு என்ருல் புத்தகமும் வாத்தியாரும் பள்ளிக்கூடமுமே நினைவுக்கு வரும். அது தன் தந்தையை மிகவும் கன்ருகப் படித்தவர் என்று கினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் அத்தனை நூல்களை வீட்டில் வைத்திருக்கிரு.ர். அவருடைய அறிவைப் புத்தகங்களைக் கொண்டு குழந்தை அளந்து பார்க்கிறது. -

இறைவன் மிகப் பெரிய அறிவுடையவன் என்பதைக் கேட்ட குழந்தை தனக்குத் தெரிந்த அளவு கோலால் அளக்கப் பார்க்கிறது. அப்பாவே இவ்வளவு நூல்களைப் படித்தவராயிற்றே. கடவுள் எத்தனே புத்தகங்களேப் படித்திருப்பார்! அவர் படித்த நூல்களேயெல்லாம் குவித்தால் ஒரு மலேயைப்போல இருக்குமே!’ என்று எண்ணுகிறது. அம்மாவிடம் கேட்கிறது. 'அம்மா, அம்மா, கடவுள் படித்த புத்தகங்கள் ஒரு கோடி இருக்குமா?" என்கிறது. ஆனல் அம்மா கூறும் விடை அதற்கு வியப்பை உண்டாக்குகிறது. - -

"அவர் ஒரு நால்கூடப் படித்ததில்லை" என்று அவள் சொல்கிருள்.

குழந்தைக்கு ஒன்றும் புரிபடவில்லை. . புத்தகம் படிக்காதவர் எப்படி அறிவுடையவராக இருக்கமுடியும்?அதற்கு யோசனை விரிகிறது. புத்தகம் படிக்காவிட்டால் அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்க நியாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/46&oldid=610104" இலிருந்து மீள்விக்கப்பட்டது