பக்கம்:பேசாத நாள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவிற் பெரியவன் A1

இல்லையே! அம்மாவை மறுபடியும் கேட்கிறது குழந்தை: "அப்படியானல் கடவுளுக்குப் பல விஷயங்கள் தெரியாமல் இருக்குமோ?" என்று கேட்கிறது.

அம்மா அதற்கும் பதில் சொல்கிருள். "அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை" என்று அவள் சொல்கிற தைக் கேட்ட குழந்தை பின்னும் வியப்பில் மூழ்குகிறது.

குழந்தை பச்சைக் குழந்தை அல்ல; சிறிது சிந்திக்கத் தெரிந்த குழந்தை. ஆதலின் அதற்குச் சிந்தனை ஓடுகிறது. புத்தகத்தைத் தானே படிப்பது ஒரு முறை, படித்தவர் களிடம் கேட்பது ஒரு முறை என்று அந்தக் குழந்தை அறிந்துகொண்டிருக்கிறது. கேள்வி முயல்" என்ற ஒளவையின் வாக்கைப் பொருளோடு தெரிந்துகொண்ட குழந்தை அது. பல அறிஞர்களுடைய உபதேசங்களேக் கேட்டு அறிவாளியாகியிருக்கலாம் என்ற கினேவு வந்தது. "அவர் காதில் பல அறிவாளிகளுடைய பேச்சுக்கள் விழுந்திருக்குமோ?” என்று குழந்தையிடமிருந்து அடுத்த கேள்வி எழுந்தது. l "அவர் காதில் மற்றவர்கள் ஓர் உபதேசமும் செய்ய வில்லை. அந்தக் காதில் அவர் யார் உரையையும் போட்டுக் கொள்ளவில்லை. சங்கினலான குழையைத்தான் காதில் போட்டுக்கொண்டிருக்கிரு.ர்." அம்மா சற்று வேடிக்கை யாகவே பேசிள்ை. ..

பிறர் வாத்தியாராக இருந்து சொல்ல அதைக் காதில் வாங்கிக்கொள்ளும் வேலே அவருக்கு இல்லையாம்.

குழந்தைக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. 'கடவுள் படித்தவர் அல்ல; படித்தவர்கள் சொல்வதைக் கேட்டதும் இல்லே. ஆனல் அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. இதை நினைக்க நினைக்கக் குழந்தைக்கு வியப்பாக இருக் கிறது. இது எப்படி முடியும்?' என்று யோசிக்கிறது سننغغتدسہ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/47&oldid=610105" இலிருந்து மீள்விக்கப்பட்டது