பக்கம்:பேசாத நாள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பேசாத நாள்

படிக்காதவர்களும், படித்தவர்களே அணுகிக் கேட் காதவர்களும் வாழ வகை தெரியாமல் துன்புறுகிருர்கள். அறிவு இல்லாதவர்கள் எந்த விதமான நன்மையையும் பெறமாட்டார்கள். எப்போதும் கவலையோடேயே இருப் பார்கள். கடவுளுக்கும் நிச்சயமாகக் கவலே பல இருக்க வேண்டும் என்ற எண்ணங்களின் விளைவாகக் குழந்தை அன்னையை, "அவருக்குக் கவலே நிறைய உண்டோ?"

என்று கேட்கிறது.

"கவலையா? அவரை கினைப்பவர்களுக்கே கவலை அணுகாதே. மிக மிகக் கவலைக்குக் காரணமான துன்பம் ஒன்று இருக்கிறது. அதை உலகில் யாராலும் போக்க முடியாது. அதைப் போக்கிப் பாதுகாக்கும் ஆற்றல் அந்தக் கடவுள் ஒருவருக்குத்தான் உண்டு."

"அது என்ன கவலே அம்மா?" 'பிறப்பு என்பதுதான் துன்பங்களுக்குள் பெரிய துன்பம். அதை கினேத்தால் பெரியவர்களுக்கு உண்டாகும் கவலைக்கு எல்லேயே கிடையாது. அந்தக் கவலையையே கடவுள் போக்கி அருளுவார்." . . . 'அவர் அறிவுடையவர் என்று சொல்கிருய்; கவலை இல்லாதவர், கவலேயை ஒழிப்பவர் என்கிருய். ஆனல் அவர் படித்ததும் இல்லே, படித்தவர் சொல்லக் கேட்டதும் இல்லை என்று சொல்கிருயே! அவருக்கு எப்படி அறிவு உண்டாயிற்று? -

}

தாய்க்கு விடை சொல்லச் சிறிது கஷ்டமாகத்தான்

இருக்கிறது. "அவர் இயற்கையாகவே அறிவு நிரம்பப் பெற்றவர். நூலறிவுக்கெல்லாம் மேம்பட்ட வாலறிவை உடையவர்' என்று சொன்னல் குழந்தைக்கு விளங்காது.

அந்தக் குழந்தை கம்முடைய மரபுகளை ஒரளவு அறிந்த

குழந்தை. வேதம், சாஸ்திரம் என்பவற்றைப்புற்றிக் கேட் டிருக்கிற குழந்தை. அதற்குத் தெரிந்திருக்கிறதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/48&oldid=610106" இலிருந்து மீள்விக்கப்பட்டது