பக்கம்:பேசாத நாள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிற். பெரியவன் 43:

கொண்டே விஷயத்தை விளக்கலாம் என்று எண்ணுகிருள் தாய். - ..

"உனக்கு என்ன என்ன புத்தகம் தெரியும்" என்று அம்மா கேட்கிருள். குழந்தை தனக்குத் தெரிந்த பாட புத்தகங்களையும் ஆத்திகுடி முதலிய சில நூல்களேயும் சொல்கிறது. . - - "நீ கேட்ட புத்தகங்களில் மிகவும் சிறந்ததாக

ஏதாவது தெரியுமா?"

"வேதம், சாஸ்திரம்."

'அந்த வேதங்களும் சாஸ்திரங்களும் பெரிய நூல்கள். அவற்றுக்கு முந்திப் புத்தகமே இல்லை. வேதந்தான் முதல் புத்தகம். அதை இயற்றியவர் கடவுள். முதல் முதலில் புத்தகம் இயற்றியவரே அவர்தாம். அறிவு என்பதே அவரிடமிருந்துதான் தோன்றியது. அவர் அறிவுருவானவர். முதல் நூாலும் அவரிடமிருந்துதான் எழுந்தது. அவருக்கு மிஞ்சின அறிவாளி இல்லை. வேதத்தையும் ஆறு சாஸ்திரங்களேயும் சொன்னவர் அவர்."

'அவ்வளவு பெரிய அறிவாளி என்கிருயே: அவருக் கென்று தனியாக அடையாளம் உண்டா? படித்தவர்கள் எது எதையோ கழுத்தில் அணிந்திருக்கிருர்களே: அவருக்குக் கழுத்தில் ஏதாவது ஆபரணம் உண்டா? - அன்னே சிரித்துக்கொண்டாள். அவருக்குக் கழுத்தில் பிறர் அணிந்த அணி ஏதும் இல்லை. அவராக அணிந்து கொண்டது ஒன்று உண்டு. அந்த அடையாளம் வேறு யாருக்கும் இல்லை." -

"என்ன அடையாளம் அது”

அவரை நீல கண்டப் பெருமான் என்று தேவர்களும் மனிதர்களும் பாராட்டுவார்கள். அவர் கழுத்தில் விஷம்

தங்கியிருக்கிறது. தேவர்களைக் காப்பாற்றும்பொருட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/49&oldid=610107" இலிருந்து மீள்விக்கப்பட்டது