பக்கம்:பேசாத நாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பேசாத காள்

ஆலகால விஷத்தை அருந்தித் தம் திருக் கழுத்தில் அடை யாளமாக வைத்துக்கொண்டார். அது அவருடைய பேராற்றலேயும் கருணையையும் புலப்படுத்திக்கொண்டு விளங்குகிறது. வேதமும் அந்தக் கண்டத்தின் வழியேதான் ஒலிக்கிறது."

'முதல் நூல் வேதம் என்று சொல்கிருயே; அப்படி யால்ை அதைச் சொன்ன கடவுள் மிகவும் வயசு ஆனவரோ?” - "ஆம், அவர் மிகவும் பழையவர். ஒவ்வோர் ஊரிலும் ஒரு குடும்பத்தை ஆதிக் குடும்பும் என்று சொல் வார்கள். ஒவ்வொரு குலத்திலும் ஒருவரை ஆதி புருஷர் என்று சொல்வார்கள். இப்படியே தேவர்களிலும் சொல்வதுண்டு. பழமையைச் சுட்டிக் காட்டும்போது இன்னர் காலம் முதற்கொண்டு என்று சொல்வது வழக்கம். ஆல்ை இப்படிச் சொல்லும் ஆதிகளெல்லாம். ஏதோ ஒரு வகையில் முதலாக நிற்பவைகளே அல்லாமல் அவற்றிற்கு முன்பு ஏதும் இல்லை என்று சொல்ல முடியாது. கிளேகளுக் கெல்லாம் முதற்கிளே என்று ஒன்றைச் சுட்டலாம். ஆனல் அது முதற்கிளேயே ஒழிய அதற்கு முன்னே தோன்றியது ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியாது. அத ற்கு முன்னே தோன்றியது அடிமரம். அதற்கும் ஆதி வேர்; அதற்கும் ஆதி விதை, அதற்கும் ஆதி அது தோன்றிய மரம். இப்படி ஆதியை ஆராய்ந்துகொண்டு ப்ோல்ை எல்லாவற்றிற்கும் மூலமாகிய ஆதியாக இருப்பது எதுவோ அந்தப் பொருளே கடவுள். ஆதிக்கு அளவாக இருக் கிறவர் அவர்.” - - *

"கடவுளை நாம் காண முடியுமா?" "அவரை இந்தக் கண்ணுல் காணமுடியாது. ஆலுைம் அவருடைய நினைப்பை ஊட்டும் உருவங்களைக் காண்லாம். கோயில்களில் அந்த மூர்த்திகள் எழுந்தருளியிருக்கிருர்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/50&oldid=610108" இலிருந்து மீள்விக்கப்பட்டது