பக்கம்:பேசாத நாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவிற் பெரியவன் 45 "ஏதாவது ஒரு கோயிலைச் சொல், அம்மா”

'இதோ சோழ நாட்டில் ஆக்கூர் என்ற தலம் இருக். கிறது. அங்கே கடவுள் எழுந்தருளியிருக்கிருர் அவருக்குத் தான்தோன்றியப்பர் என்று பெயர். அதுவே கடவுளுடைய பழமையைக் காட்டுகிறது. அவர் பிறரால் உண்டாக்கப் பட்டவர் அல்ல. அவருக்கு முன் யாரும் இல்லை. அவரே ஆதிக்கும் ஆதிக்கும் ஆதியானவர். தாமே தோன்றினவர்: சுயம்பு மூர்த்தி. எல்லோரையும் தோற்றுவித்த தங்தை. தான்தோன்றியப்பர் என்ற திருகாமம் இந்தக் கருத்துக் களேத் தெரிவிக்கின்றது. -

குழந்தை அறிவு மயமான கடவுளே, ஆதிக்கு அளவாக, கிற்கும் தான்ருேன்றியப்பரைத் தியானிக்கப் புகுந்து, விடுகிறது.

இறைவனுடைய தன்மைகளைக் குழந்தைக்குத் தாய், சொல்வதுபோல அழகாகச் சொல்கிருர் அப்பர் சுவாமிகள்.

ஓதிற்று ஒருநூலும் இல்லை போலும்;

உணரப் படாதது ஒன்று இல்லே போலும்; காதில் குழை,இலங்கப் பெய்தார் போலும்;

கவலைப் பிறப்பு:இடும்பை காப்பார் போலும்; வேதத்தோடு ஆறங்கம் சொன்னர் போலும்;

விடம்சூழ்ந்து இருண்ட மிடற்றர் போலும்; ஆதிக்கு அளவாகி நின்மூர் போலும்; -

ஆக்கூரில் தான்தோன்றி அப்ப குரே. (படித்தது ஒரு நூலும் இல்லை; தம்மால் அறியப்படாதது. ஒன்றும் இல்லை; தம் திருச்செவியில் சக்கினலான அணியை விளக்கும்படி அணிக்கவர்; கவலைக்குக் காரணமான பிறவியாகிய துன்பத்தை அடியார்கள் அடையாமல் பாதுகாப்பவர்; வேதத், தேர்டு ஆறு சர்ஸ்திரங்களையும் திருவாய் மலர்ந்தருளினவர் ஆல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/51&oldid=610109" இலிருந்து மீள்விக்கப்பட்டது