பக்கம்:பேசாத நாள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிழி

நிள்ளிருள். யாரோ வீட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்திருக்கிறது போலத் தெரிகிறது. காலடிச் சத்தம் கேட்கிறது. காதை நெரித்துக்கொண்டு கேட்கிருேம். மூச்சை வேகமாக விடாமல் கேட்கிருேம். காலடியோசை தெளிவாகக் கேட்கிறது. அதைக் கேட்பதற்காக மூச்சை அடக்கிக் கொள்கிருேம். ஒன்றை உற்றுக் கவனிக்கும் போது மூச்சை அடக்குவது இயற்கையாக இருக்கிறது.

உற்றுக் கேட்கும்போது மூச்சை அடக்கிக் கேட்பது போலவே,எதையேனும் ஒன்றை உற்றுப் பார்க்கும்போதும் மூச்சை வேகமாக விடாமல் நிதானமாக விடுவதுதான் இயல்பு. மனத்தை ஒருமுகப்படுத்தும் போதெல்லாம் மூச்சு மெதுவாக இயங்கும். யோகம் செய்பவர்கள் மூச்சை அடக்கி மனத்தை நிறுத்த முயல்கிருர்கள். மூச்சின் ஒட்டத்துக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு.

இறைவனைத் தியானிக்கையில் மனம் ஒருமுகப்படும் போது மூச்சுக் காற்று மெல்ல மெல்ல ஒடுங்கி இயங்கும்.

. ★ - - - அப்பர் சுவாமிகள் இறைவனைத் தியானித்து இன்

புறும் வகையைச் சொல்கிரு.ர். -

மனம் ஒரு பொருளேத் தியானிக்க வேண்டுமானல் அது ஒர் உருவத்தைத்தான் தியானிக்க முடியும். உருவம் இல்லாத ஒன்றைப் பற்றுவது என்பது மனத்தால் முடியாத காரியம். ஆதலால்தான் இறைவனுக்கு உரு வங்கள் அமைந்திருக்கின்றன. இறைவனுடைய திரு வுருவத்தை உள்ளத்துக்குள்ளே தியானிப்பது எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/53&oldid=610111" இலிருந்து மீள்விக்கப்பட்டது