பக்கம்:பேசாத நாள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Αφ8 பேசாத நாள்

அப்பர் சுவாமிகள் தியானம் என்று சொல்லவில்லை உள்ளத்தில் இறைவனுடைய உருவத்தை எழுதவேண்டும் என்று சொல்கிருர். அதுவும் தியானந்தான். ஆலுைம் தியானத்தின் முதிர்ந்த நிலை அது. அதனைத் தாரணை என்று கூறுவர் யோகியர்.

கிழியில் ஒவ்வோர் அங்கமாக ஒவியன் எழுதிக் கொண்டு வருகிருன். ஒர் அங்கத்தை எழுதிவிட்டால் அது மறையாமல் கின்றுவிடுகிறது. அவ்வாறே ஒவ்வோர் அங்கமாக எழுதி எழுதி உருவம் முழுவதும் நிரம்புகிறது. ஒவியம் முழுவதும் ஒரு கணத்தில் எழுதி முடிவது அன்று. சிறிது சிறிதாக எழுதி முற்றுப்பெறச் செய்யவேண்டும்.

ஒன்றை எழுதிவிட்டால் மாருமல் இருக்கும் கிழியில் எழுதுவதற்கே பல காலம் செல்லுமானல் ஒன்றை நினைத் தால் மறுகணமே மாறும் மனத்தில் ஒர் உருவத்தை எழுது வது எவ்வளவு அருமை ! . கடுத் தெருவில் ஒரு துணியைக் கட்டி அதில் ஒவியன் ஒவியம் தீட்டப் புகுகிருனென்று வைத்துக்கொள்வோம். காற்று அடிக்கும்போது ஓவியச் சில அசையும் அசைந்து கொண்டிருக்கிற கிழியில் எப்படிச் சித்திரத்தை எழுத முடியும்? - " . . -

ஓவியக் திட்டுபவர்கள் முதலில் கிழியை கன்ருக இறுக்கிக் கட்டி விறைப்பாக இருக்கச் செய்து அதன்மேல் எழுதுவாாகள. . . • . . . . .

மனமோ காற்ருல் அசையும் துணிபோலச் சலன முடையது. அதில் எதையாவது எழுத முடியுமா? அதன் சலனத்தைப் போக்கிவிட்டுப் பிறகே எழுதவேண்டும். மூச்சுக் காற்று விசாதபடி செய்து மனமென்னுங் கிழியை விறைப்பாக வைத்துப் பிறகு உருவை எழுதவேண்டுமாம். அப்படி எழுதும்போது வேறு ஒரு கவனமும் இன்றி உற்று

நோக்கி எழுதவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/54&oldid=610112" இலிருந்து மீள்விக்கப்பட்டது