பக்கம்:பேசாத நாள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிழி 53

இறைவன் அமரரைப் பார்ப்பதுண்டு. ஆயினும் அருட் கண்ணுல் நோக்குவதில்லை. அவர்கள் அல்லாதார். ஆதலின் அமரர்நாடு ஆள்வதிலே இறைவனுக்கு விருப்பம் இல்லை.

உயிரா வனம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு எழுதி உயிர்ஆ வணம்செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி அயிரா வணம்ஏருது ஆணேறு ஏறி .

அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட் அயரா'வனமேஎன் அம்மா னேஉன் -

அருட்கண்ணுல் நோக்காதார் அல்லா தாரே. (உணரப்படுவார் - உணர்வார். படு என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. போகப்பட்டகாலத்தில், ராமளுகப்பட்டவன் என்பவற்றிற் போலப் படு என்ற சொல் ஒரு பொருளுமின்றி வந்தது. ஒட்டி - வேறுபாடின்றி ஒன்றுபட்டு. வாழ்தி - வாழ் கிருய். ஆனேறு இடபம். அம்மானே தலைவனே.)

, ★ - 'இறைவன யார் ஒருமைப் பாட்டுடன் தியானித்துத் தாரணை செய்கிருர்களோ அவர்களோடு இை ற வன் இரண்டறக் கலந்துவிடுவான். அ த்தகையவர்கள் இங்கே இருப்பதால் இவ்வுலகத்தில் ஆளுருக்கு எழுந்தருளின்ை. அவன் அருட் பார்வை பெறுபவரே கல்லோர்; ஏனையோர் அல்லாதார் என்று பாடினர் அப்பர். * -

இது ஆரும் திருமுறையில் 25-ஆம் பதிகத்தின் முதற் பாட்டு. . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/59&oldid=610117" இலிருந்து மீள்விக்கப்பட்டது