பக்கம்:பேசாத நாள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து வஞ்சகர்

இன்பமும் துன்பமும் பிறரால் வருகின்றன என்று எண்ணிப் பிறரிடம் உறவும் நட்பும் பாராட்டி வாழ் கிருேம். வெறுப்பு விருப்புகளைக் கொள்கிருேம். உண்மையில் நமக்குப் பகையாக ஐந்து பேர்கள் நம்முடன் இருக்கிருர்கள். அவர்களுடைய வசத்திலே அடிமைப்பட்டு நாம் வாழ்கின்ருேம். கம்மை ஐந்து பேரும் ஐந்து விதமாகப் பற்றி அலேத்துத் துன்புறுத்துகிருர்கள். ஐந்து பேரும் ஐந்து வேறு தொழில்களை உடையவர்கள். ஒரு பேர்வழி பொருள்களின் கிறம் வடிவம் என்பவற்றை அறிவதில் வல்லவன். காட்சி முழுவதும் அவன் கையில் அடங்கி யிருக்கிறது. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று நாம் கினைத்தால் எதையாவது ஒன்றைக் காட்டி அந்தக் காட்சியிலே நம்மை மயங்கப் பண்ணி நம்முடைய காரியம் நடவாமல் தடைசெய்து விடுகிருன் பலவகை ஒலி களையும் இசையையும் பேச்சையும் தெரிந்து உணர்த்தும் மற்ருெருவன் இருக்கிருன். அவனே ஏதாவது இனிய ஒலியோ பேச்சோ இருக்கும் இடத்துக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடுகிருன். சந்தனம், மலர், ஊதுவத்தி முதலிய மணம் கிறைந்த பொருள்களைக் காட்டி அவற்றில் மயங்கி விழும்படி பண்ணுகிருன் மற்ருெருவன். ஆறு வகையான சுவையுடைய பண்டங்களைத் தனக்குப் படையாகக் கொண்டு வெற்றி கொள்கிருன் பின்னும் ஒருவன். மெத் தென்ற பஞ்சண, இனிய தென்றல், மெல்லியல்புடைய மங்கை என்றெல்லாம் ஆசை காட்டி. அழைக்கிருன் - ஒருவன். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/60&oldid=610118" இலிருந்து மீள்விக்கப்பட்டது