பக்கம்:பேசாத நாள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து வஞ்சகர் 55

இப்படியாக ஐந்து பேரும் நம்மிடம் மூண்டு வருகின்ற ஐந்து வேறு தொழில்களே உடையவர்கள். அவர்களைப் பார்த்தால் சாதுக்களைப்போல, ஊமைகளைப்போல, இருக் கிருர்கள். ஆணுல் அவர்களால் நடைபெறும் வஞ்சகச் செயல்களே என்னவென்று சொல்வது !

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் இந்த வஞ்சகர்களே மகிழ்விக்கும் காரியத்திலேயே ஈடுபட்டிருக்கிருன் உடன் வாழ்ந்து கெடுக்கும் அகப் பகைவர் இந்த ஐவரும்.

உலக முழுவதும் இவர்கள் ஓடுகிருர்கள். நம்மை ஒடச் செய்கிருர்கள். ஆயிரம் மைல் கடந்து சென்று அங்கே உள்ள காற்றை நுகரச் செய்கிருன் ஒருவன். பல நூறு மைல் கடந்து அங்குள்ள உணவை உண்ணச் செய்கிருன் ஒருவன். மற்றவர்களும் இப்படித்தான் செய்கிரு.ர்கள். - - -

ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் அலசிப் பார்த் தால் இந்த ஐந்து பேர்களின் துரண்டுதலால் செய்யும் செயலாகவே முடியும். இது எப்போதோ கிடைபெறுகிற செயல் அன்று. ஒவ்வொரு நாளும் இதுதான் கடக்கிறது. இந்த ஐந்து பேர்களுடைய அதிகாரமே உலக முழுவதும் நடைபெறுகிறது. எந்த ஊரானலும் எந்தக் காலமாலுைம் இந்த வஞ்ச முகவிகள் ஐவருடைய பிடிப்பிலே அடங்காத மனிதரே இல்லை; உயிரே இல்லே. இவர்களால் அலைப் புண்டதல்ை உயிர்கள் மீட்டும் மீட்டும் உலகில் பிறந்து மறுபடியும் இந்த வஞ்சகர்களுட்ைய ஆணைக்கு அடங்கி வாழும்படி ஆகிவிடுகிறது.

'உம்முடைய அதிகாரம் நம்மிடம் செல்லாது” என்று சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. முதலில், அவர்களின் ஆணையினல் காம் மயங்கி விற்கிருேம், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/61&oldid=610119" இலிருந்து மீள்விக்கப்பட்டது