பக்கம்:பேசாத நாள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து வஞ்சகர் 57

தம்முடைய அதிகாரத்தை மீறுவாரும் மறுப்பாரும் இன்றி ஆட்சி செலுத்திய அந்த ஐந்து பேருக்கு ஆச்சரியம் உண்டாகிவிட்டது. இதென்ன வேடிக்கை ! உலக முழுவதும் கம்முடைய ஆணே கடக்கிறதென்று இவன் தெரிந்துகொண்டிருக்கிருன். நம்முடைய வலிமையை அறிந்தும் இவன் மிரட்டுகிருனே இவன் யாராயிருக்க லாம்? என்ற சிந்தனே பிறந்தது. நீர் யார் ஐயா?” என்ற கேள்வி உடனே அவர்களிடமிருந்து எழுந்தது. . “என்னையா கேட்கிறீர்கள்? உலகமெல்ல்ாம் உம் முடைய ஆணேயை நீங்கள் கடத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதோடு அதற்கு மேலும் தெரிந்து கொண்டவன் யான். எல்லா உலகங்களையும் தாங்கிப் பாது காக்கும் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அந்தப் பெருமானே நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்" என்ருர் அப்பர். - 'வாஞேர்கள் எல்லாம் எங்கள் ஆணேக்கு அடங்கி வாழும்போது நீர் யார் ஐயா சிறு மனிதர், இப்படிப் பேசுகிறிரே?

"ஆம், வானவர்கள் உங்கள் மயக்கத்தில் வீழ்க் திருக்கலாம். ஆனல் உண்மையில் அவர்களுக்கு ஆதார மாக கிற்கிறவன் ஒருவன் இருக்கிருன் வானேர்கள் வாழும் தேவலோகமே அந்தப் பெருமானல் நிற்கிறது. அவன்தான் நெடுந்துள்ணேப் போல அமரருலகத்தைத் தாங்குகிருன். இந்திரன் அல்ல; முப்பத்து மூன்று தேவர்களும் அல்ல."

- வாளுேர்

நீள்வான முகடதனத் தாங்கி நின்ற

நெடுந்துாணே. - - - - (வானேர்களுக்குரிய உயர்ந்த தேவலோகமாகிய வீட்டின் முகட்டைத் தாங்கி ஆகாரமாக கின்ற உயர்ந்த தூண் போன்றவனே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/63&oldid=610121" இலிருந்து மீள்விக்கப்பட்டது