பக்கம்:பேசாத நாள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. பேசாத காள்

வானம்-அமாருலகம். முகடு-உச்சி. முகடு அதன: அத பகுதிப் பொருள் விகுதி; அதற்குத் தனியே ஒரு பொருள் இல்லே.)

'இது மாத்திரமா? கீழுலகங்களுக்கெல்லாம் உள்ளே கருவாகி மூலமாகி வேராகி இருந்து பாதுகாக்கும் பெரு மானும் அவன்தான்.”

பாதாளக் கருவை.

(பாதாள உலகத்துக்கு மூலமாக கின்ற பொருளே. பாதாளம் என்றது கீழுலகம் அனேத்தையும் குறித்தது. கரு.மூலமான பொருள்.) .

'வானவர்களைத் தாங்கும் துரணுக இருக்கட்டும்; பாதாளத்தின் கருவாக இருக்கட்டும்; இந்தப் பூவுலகில் வாழும் உமக்கும் அவனுக்கும் என்ன ஐயா தொடர்பு? வானேர்களையும் நீர் கண்டதில்லை; பாதாளத்தையும் கண்டதில்லே. உம்முடைய கண் காண இந்த உலகத்தில் வாழ்பவர் எல்லாம் எங்கள் வசப்பட்டு நிற்பதை நீர் தினந்தோறும் பார்க்கிறீர். இங்கே எங்கள் அதிகாரத்தை நடத்த யார் தடையாக இருக்க முடியும்?' என்ற கேள்வி பிறந்தது. -

"வாைேருக்குத் தூணுகவும் பாதாளத்தாருக்குக் கருவாகவும் இருப்பதை நான் நேரே அறிந்ததில்லை. பிறர் சொல்லத்தான் கேட்டிருக்கிறேன். ஆனல் இந்த உலகத் தைப் பொறுத்தவரையில் எனக்குக் கண்கூடாகத் தெரி யும். இவ்வுலகமெல்லாம் அந்தப் பெருமானுடைய ஆட்' சிக்கு அடங்கி நிற்பது என்பதை அறிந்து கொண்டேன். திருவாரூரிலே இருந்து தன் அருளாணேயாலே எல்லாவற். றையும் ஆளும் உண்மையான பிரபுவைத் தெரிந்துகொண்ட பிறகு நான் சும்மா இருப்பேன? மிக மிக வேகமாக அவனே அடையப் புறப்பட்டுவிட்டேன். விரைவில் அவனே. அடைந்தே விடுவேன். அவன்தான் எனக்குப் பற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/64&oldid=610122" இலிருந்து மீள்விக்கப்பட்டது