பக்கம்:பேசாத நாள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் கெடும் வழி 63

எம்பெருமானே கினேந்து அலறக்கூட நமக்குத் தெரி யாது. நம்முடைய வேதனைகளைச் சொல்லத் தெரியும்: அவற்றையும் முழுமையாகச் சொல்லத் தெரியாது. யாரிடம் முறையிட்டுக்கொள்ள எண்ணுகிருேமோ, அந்த இறைவனே எப்படி அழைத்து அலறுவது? இது நமக்குத் தெரியாது. இதை அப்பர் சுவாமிகள் சொல்லித்தருகிருர்,

'செஞ்சே, நீ வா' என்று தொடங்கினவர், இறை வனப்பற்றிச் சொல்கிரு.ர். “அதோ பார் இறைவனே. அவனுடைய திருமுடியிலே உள்ள சடை தெரிகிறதா? செஞ்சடையாகிய அது ஒளி விடுகிறது. அதில் நிலவும் இருப்பதால் ஒளி சேர்ந்த சடையாக இருக்கிறது. ஒளி யென்றமாத்திரத்தில் சூரியனைத்தானே நினைக்கிருய்? சூரியனிடம் ஒளி இருப்பது போலவே வெப்பமும் இருக் கிறது. அப்படி இந்தச் சடை சிவப்பாகத் தழல்போல ஒளிவிடுவதால் இதிலும் வெப்பம் இருக்குமென்று அஞ்சாதே. இது தன்னிடத்திலே தண்மையை யுடைய கங்கையைத் தரித்த சடை இறைவனுடைய புனிதத் தன்மையினல் புனிதமான கங்கை அது. உலகத்தில் மலப்பிணிப்பினல் மாசு ஏறிய உனக்கு இந்தப் புனிதன் அருள் கிடைத்தால் அந்த மாசெல்லாம் போய்விடும். ஆகையால் இந்தப் பெருமான் பெயரைச் சொல்லி அழைத்து அலறுவாயாக! நிறைந்த ஒளி சேர்ந்ததும் கங்கையை உடையதுமாகிய சடையையுடைய பெருமானே என்று கூவிப் போற்றுவாயாக!” என்கிருர். х

ஈண்டுஒளிசேர் கங்கைச் சடையாய் என்றும். (நெருங்கிய ஒளி சேர்ந்த, கங்கையை அணிந்த சடையை புடையவனே என்றும் அலற கில்லே என்று முடிக்கப் போகிறர். ஈண்டுதல். தொகுதல்; கூடுதல்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/69&oldid=610127" இலிருந்து மீள்விக்கப்பட்டது