பக்கம்:பேசாத நாள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பசாத நாள்

போதும் ஓரிடத்தில் கில்லாமல் உழன்று சுழன்று அதல்ை இடர்ப்படுகிருய். யார் யாரையோ கண்டு மருளுகிருய். இந்த அலைச்சலையும் மருட்சியையும் அவன் போக்கிவிடு வான். அவனே கினேந்து நீ முறையிடு.” -

கலைமான் மறிஏந்து கையா என்றும்.

(ஆண் மான்கன்றை ஏந்தியிருக்கும் திருக்கரத்தை உடைய வனே என்று சொல்லியும், !

- אל

தின்னே யார் யார் அழைக்கிருர்களோ அவர்களிடத் தில் போய் அருள்புரிய ஆயத்தமாக இருக்கிருன் அவன். தர்மத்தையே இடபமாக்கி அதன்மேல் ஏறி வருபவன் அவன். கினைத்த இடங்களுக்குப் போகத்தானே வாகனம் வேண்டும்? இறைவன் அன்பர்கள் அலறி அழைக்கின்ற இடங்களுக்குப் போகும்பொருட்டே இடபத்தை வாகன மாகக் கொண்டிருக்கிருன் . r

“எத்தனையோ விதமான இன்ப நுகர்ச்சிகளை இவ்வுல கிலே நீ பெற்றிருப்பாய். ஆனல் அந்த இன்பங்கள் யாவும் இறுதியில் மரணத்திலே கொண்டுபோய் விடுகின்ற சிற்றின்பங்களே, குளிர்ந்து கொல்லும் கஞ்சைப் போன் றவை. இறைவனே அமுதம் போன்றவன், தெவிட்டாது இனிக்கும் அமுதம் அவன் மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும் அமுதம். அவனைப்போல வேறு யாரும் இல்லை. அவன்தான் எல்லோருக்கும் ஆதி. ஆதலின் அவனே,

கினைந்து புலம்பு.” . . . . . .: .

அடல்விடையாய் ஆரமுதே ஆதி என்றும். - ஆற்றலையுடைய இடபவாகனத்தையுடையவனே, தெவிட் டாத அமுதம் போன்றவனே, எப்பொருளுக்கும் மூலகாரண மான முதற் பொருளே என்று கூறியும்.) -. - :

. . . . " ‘。★ .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/72&oldid=610130" இலிருந்து மீள்விக்கப்பட்டது