பக்கம்:பேசாத நாள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் கெடும் வழி 67

“இப்படி இருக்கும் பெருமான் தன்னே உலகில் உள் ளவர் மறவாமல் இருக்கும்படி அவ்வப்போது சில இடங் களில் அருள்விளையாட்டை கடத்தினன். அவற்றை மக்கள் நினைத்து வழிபடும்பொருட்டுத் திருக்கோயில்களே அன் பர்கள் நிறுவ, அவற்றில் திவ்யமங்கள மூர்த்தியாய் எழுங் தருளி யிருக்கிருன். திருவாரூரில் தியாகேசகைக் கோயில் கொண்டிருக்கிருன். ஆரூரா என்று சொல்லிச் சொல்லி நீ அலறிக்கொண்டிரு. உன் இடர்கள் கெடும்.' ஆரூரா என்றென்றே அலரு நில்லே. (கிருவாரூரில் எழுந்தருளியிருப்பவனே என்று சொல்லிச் சொல்லி அலறி கிற்பாயாக. அலகு கில் என்றது இடைவிடாது புலம்புவாயாக என்ற பொருளேயுடையது. என்று என்றே. அலரு.அலறி.)

'கங்காதரா, சடாதரா, சோதி, நீறு பூசிய கின்மலா, நீலகண்டா, மிருக பாணி, இடப வாகன, அமுதமே. ஆதியே, ஆரூரா என்று இடைவிடாது புலம்பினால் இடர் கெடும் என்று உபதேசிக்கிருர், வாகீசர்.

இடர்கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நிவா;

ஈண்டொளிசேர் கங்கைச் சடையாய் என்றும் சுடர்ஒளியாய் உள்விளங்கு சோதி என்றும்

து நீறு சேர்ந்திலங்கு தோளா என்றும் கடல்விடமது உண்டுஇருண்ட கண்டா என்றும் கலமான் மறிஏந்து கையா என்றும் அடல்விடையாய் ஆரமுதே ஆதி என்றும் ஆரூரா என்றென்றே அலரு நில்லே. (நெஞ்சே, எண்ணுகியேல் ಖ7; என்றும் என்றும் என்றும். என்றென்றே அல்ரு கில் என்க. என்றென்றும் என்பது என்றென்று என நின்றது; விகாரம்.) .

இது முப்பத்தோராம் பதிகத்தில் உள்ள முதற் பாட்டு. . . . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/73&oldid=610131" இலிருந்து மீள்விக்கப்பட்டது