பக்கம்:பேசாத நாள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியனைக் கண்டேன்

திருவையாற்றுக்கு அருகில் திருப்பத்துருத்தி என்ற தலம் இருக்கிறது. திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான உற்சவத்தில் கலந்து கொள்ளும் ஏழு மூர்த்திகளில் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளி யிருக்கும் பெருமானும் ஒருவர். அத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு ஈடுபாடு மிகுதியாக உண்டு. அங்கே அவர் ஒரு திருமடம் அமைத் துக்கொண்டு பலகாலம் தங்கி இறைவனைப் பல பதிகங்க ளால் துதித்து வழிபட்டார்." -

திருப்பூக்துருத்திக்கு முதலில் வந்து திருக்கோயிலுக் குள் சென்ருர், அவருடைய உள்ளத்தே அன்பு பொங் கியது. உணர்ச்சி விஞ்சியது. நேர்ந்தபரி வொடுத்தாழ்ந்து கிறைக்தொழியா அன்பு பொங்க, வார்ந்த கண்ணிர் மழை துரங்க அயர்வுறுக் தன்மையர் ஆனர்.”

உணர்ச்சி பொங்கும் பொழுது மனமுருகிக் கவிபாடும் வாகீசர் இறைவனேக் கண்ட பேரானந்தத்தை ஒரு திருத் தாண்டகத்தால் வெளியிடத் தொடங்கினர். 'திருப்பூந் துருத்தியில் நான் கண்டேன்' என்று பெருமிதத்தோடு பாடினர். என்னே ஆட்கொண்டு. என்னுடைய மனத்தைப் பக்குவப்படுத்தி மெய்யான அருளின்ப அநுபவத்தை வழங்கிய பெருமானேக் கண்டேன்' என்று ஆராமை மீது ரப் பத்துப் பாடல்களைப் பாடினர். முதற் பாசுரத்தை இங்கே பார்க்கலாம். -

பெரிய புராணம், திருகாவுக்கரசர் புராணம்,355390

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/74&oldid=610132" இலிருந்து மீள்விக்கப்பட்டது