பக்கம்:பேசாத நாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியனக் கண்டேன் 69

நாவுக்கரசர் பேசுகிருர்: என் மனம் காற்ருய்ச் சுழன்று பேயாய் அலேந்தது. அது பற்ருத பொருள் இல்லை; பற்றி ஒரு கண்ம் கின்ற இடமும் இல்லே. ஒரு கணம் பற்றியதை மறுகணம் பற்ரு மல், ஒரிடத்தில் கில்லாமல் அலேந்து திரிவதையே தன் இயல்பாகக் கொண்ட இந்த மனத்தை நிறுத்துவதென்பது என் ஆற்றலுக்குள் அடங்கியதாக இல்லை. அது போன வழி யெல்லாம் கான் போய்க் கொண்டிருந்தேன். அதனல் நான் கண்டது துன்பங்தான். - -

இத்தகைய பேய்மனம் கின்றது. ஒன்றையே பற்றி கின்றது. இறைவனுடைய தியானத்திலே ஒன்றி நின்றது. அவனே நினைக்கும் கிலே என் நெஞ்சுக்கு உண்டாயிற்று, அந்த கிலேயை அது தன் முயற்சியாற் பெறவில்லே. அது முன்பு என்றும் கினையாத நெஞ்சு ஆயிற்றே. நானும் முயன்றிலேன். இறைவனே தன் கருணைமிகுதியால் என் நெஞ்சை வழிப் படுத்தித் தன்னை நினைக்கச் செய்தான். நினையா என் நெஞ்சை நினவித்தான்.

இந்த கிலேயை நான் பெற்றபோது எனக்கே வியப்பாக இருந்தது. இதை எப்படி இறைவன் நிறுத்தினன் என்று ஆராய்ந்தேன். அவனுக்கு இதைப்போன்ற செயல்களே விளையாட்டாக இருக்கின்றன என்று உணர்ந்தேன். ஓரிடத் தில் கில்லாமல் ஓடி அலேகொந்தளிக்கப் பாய்ந்து வந்த கங்கையைத் தன் சடையிலே நிற்கச் செய்தான். 'என்னேத் தாங்குவார். யார்?' என்று அது கொந்தளித்து வந்தது. அப்போது அதனைத் தன் சடையின்மேல் அடங்கி நிற்கும் படி செய்தான். நில்லாத நீரைச் சடையின்மேல் நிற்பித்த பெருமா தைலினல் கினையா என் நெஞ்சை கினேவித்தான். *Y.

எப்போதும் திரிந்து உழன்ற மனத்தைத் தன் அருளால் நிறுத்தித் தன்னை கினேக்கச்செய்த அந்தப் பெருமானே கான் பூந்துருத்தியில் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/75&oldid=610133" இலிருந்து மீள்விக்கப்பட்டது