பக்கம்:பேசாத நாள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - -- பேசாத நாள்

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானே

நினையாஎன் நெஞ்சை நினைவித் தானே

பூந்துருத்திக் கண்டேன் நானே.

& அவனை நினைக்கப் பண்ணியதல்ை என்ன பயன்? எங்கும் சென்ற மனம் ஓரிடத்தில் நின்று இறைவனே நினைப்பது வியப்பான செயல்தான். அந்த வியப்பு ஒன்று தான் கண்ட பயன? அப்பர் சுவாமிகள் மேலே சொல் வதைக் கேட்போம் : - 1 * நான் எத்தனையோ கற்றேன். சமய நூல்களைக் கற் றேன். சமண நூல்களைக் கற்றுப் பலரும் வியக்கும் புலமை யுடையவகை விளங்கினேன். இலக்கிய இலக்கணங்களே யும் கற்றுத் தேர்ந்தேன். என் மனம் அகலந்திருந்த காலத் தில் அந்த அலைச்சலே அடக்கி அமைதிபெற வழிதெரியாமல் ஏதேதோ கற்றேன். ஆனல் காணுகக் கற்ற அப்போது உண்மையில் கான் ஒன்றும் கற்கவில்லை. என் மனத்தை நிறுத்தித் தன்னை நினைக்கச் செய்தானே, அப்போது நான் - புதிதாக ஏதும் கற்க முயலவில்லை. ஆல்ை அப்போதுதான்

முன்பு கல்லாத கல்வியை யெல்லாம் கற்றுக் கொண்டேன். என் முயற்சியின்றியே தன் கருணே மிகுதியால் எனக்கு அநுபவத்தின் மூலமாகக் கற்பித்தான். அதுகாறும் கான் கற்ற கல்வி பயனில்லாத கல்வியாக ஒழியக் கல்லாத கல்வி யைக் கற்பித்து இன்புறுத்தின்ை இறைவன். அவனே, அல்லவா நான் பூந்துருத்தியில் கண்டு உருகிப் போனேன்!

கல்லா தனஎல்லாம் கற்பித் தானே... - . . . . .

பூந்துருத்திக் கண்டேன் நானே. r

மனம் கின்றது, அவனே கினைந்தது: கல்லாத கல்வி யைக் கற்றேன் என்ற அளவில் நின்ருல் சருகு அரித்தபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/76&oldid=610134" இலிருந்து மீள்விக்கப்பட்டது