பக்கம்:பேசாத நாள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியனேக் கண்டேன் γ1

தானே ஆகிறது? இவைகளெல்லாம் சாத்தியநிலை அல்லவே! சாதனங்தானே? என்ன லாபம் கைமேல் கிடைத்தது?

இப்படிக் கேட்டுப் பார்க்கலாம். அப்பர் கூறும் விடையை இப்போது கேட்கலாம்:

ஆம், அவன் அருளே கற்பிக்க நான் கல்லாதன வெல் லாம் தெரிந்து கொண்டேன். அதற்குமேல் இதற்குமுன் அறியாத இன்பத்தை யெல்லாம் கண்டு கொண்டேன். அமைதி பெருத மனத்தை வைத்துக் கொண்டு கல்வி யென் லும் காட்டில் உழன்று திரிந்து மேலும் மேலும் கவலைக்கு ஆளாகி அநுபவத்தில் ஒன்றையும் காணுமல் நூலறிவோடு கின்ற எனக்குக் கல்லாக் கல்வியாலே வரும் வாலறிவைத் தந்தான்; அதன்பயனகிய இன்ப அநுபவத்தைத் காட்டி ன்ை காணுத இன்பங்களைக் காட்டி யருளினன். பூந்துருத் தியில் அத்தகைய அருட்கடலேயே கண்டேன்.

காணு தனவெல்லாம் காட்டினனே....

பூந்துருத்திக் கண்டேன் நானே.

- 女 - இன்னும் என்ன அநுபவம் கிடைத்தது?-இந்தக்

கேள்விக்கு காவுக்கரசர் விடை கூறுகிருர்:

அவன் என்ைேடு பேசினன். நானும் நீங்களும் பேசு வது போன்ற பேச்சா அது? சொல்லின் அளவைக் கடந்த இன்பச் சுழலிலே என் தனி நாயகளுகிய ஐயனுடைய பேச்சு, பேசாத பேச்சு அல்லவா? அங்கே மற்ற யாரும் சொல்ல் முடியாதவற்றைச் சொன்னன்; என்னே உணர வைத்தான். வாய் படைத்தார் சொல்லும் சொற்கூட்டத் துக்குள் அடங்காத சொல்ல அவன் சொன்னன்; சொல் லாமற் சொன்னன். ‘. . . . . .

அப்படிச் சொன்னதை நான் முதலில் கவனிக்கவில்லை. காதுகேட்க, வாயாலே சொன்னதைக் கேட்டுக் கேட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/77&oldid=610135" இலிருந்து மீள்விக்கப்பட்டது