பக்கம்:பேசாத நாள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வின வந்தால் என்ன?

உடம்பில் கடுமையான நோய் வந்து மருத்துவரிடம் காட்டுகிருர் ஒருவர். மருத்துவர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிருர் கருவிகளால் கீறியும் அறுத்தும் தைத்தும் மருத்துவர்கள் "ஆபரேஷன் செய் கிரு.ர்கள். அந்தச் சிகிச்சையைச் செய்யும்போது நோயா ளிக்குத் துன்பம் .ெ த ரி ய | த ப டி மயக்க மருந்து கொடுத்துவிடுகிருர்கள். இப்போதெல்லாம் எந்தப் பகுதி யிலே சஸ்திர சிகிச்சை செய்யவேண்டுமோ, அந்தப் பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாமல் மரத்துப் போகும்படி ஊசியில்ை ஒரு மருத்தை முதலில் ஏற்றுகிருர்கள்.

. புண்ணக் கீறும்பொழுதும் அறுக்கும்பொழுதும் இரத்தம் வெளியில் வருகிறது. ஆனல் நோயாளிக்கு அப்போது வேதனை தெரிவதில்லை. நோயாளி உயிரோடு இருக்கும்போதே அவன் உடலில் உள்ள உறுப்புக்களே அறுக்கிருர்கள். அப்படிச் செய்யும்போது உண்டாகும் வலி உறைக்காதபடி மயக்க மருந்து செய்துவிடுகிறது.

உலகில் பிறந்தவர்கள் யாவரும் ஊழில்ை இயக்கப்படு கிருர்கள். ஊழ்வினே எப்படியாவது தன் வலிமையைக் காட்டிவிடும். அதை மாற்றவே முடியாது. ஆல்ை அதனல் உண்டாகும் துன்பங்களே உணர முடியாத கிலே யைப் பெறலாம். கருவிகளால் அறுக்கும் போது நோயா ளியின் உடம்பில் இரத்தம் வந்தாலும் அவன் வேதனையை உணராமல் இருப்பது போல், அந்த நிலையில் ஊழின் விளைவு நிகழ்ந்தாலும் அந்த விளைவினல் துன்பம் உருமல் இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/80&oldid=610138" இலிருந்து மீள்விக்கப்பட்டது