பக்கம்:பேசாத நாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்விண் வந்தால் என்ன ? 75

நோயாளிக்கு மரக்க அடிக்கும் மருந்து உதவுவது. போல, அறிவுள்ள மக்களுக்கு இறைவன் திருவருள் உதவு கிறது. "ஐயோ! தலைவி தியே!” என்று துன்பம் வருவதற்கு முன்பிருந்தே மனம் நைந்து வருந்தத் தொடங்கும் பேதை யரைப் போலன்றி, வருவதுவரட்டும் என்று தைரியத்தோடு இருந்து, இறைவனுடைய திருவடி கினேவோடு வாழ்பவர் களுக்கு ஊழில்ை உண்டாகும் துன்பங்கள் உறைப்ப தில்லை. மற்றவர்களெல்லாம் ஊழ்வினைக்கு அஞ்சுவார்கள். இறைவனுடைய் மெய்யன்பர்கள் அஞ்சுவது இல்லை. அன்பர்களுக்கு ஊழ்வினை இல்லை என்று கொள்ளக் கூடாது. ஊழ்வினை வந்து ஊட்டுவதினின்றும் தப்புவார் யாரும் இல்லை. கத்தி மேலே பட்டுக் காயம் உண்டானல் துடித்துப் போகிற மனிதன், மருத்துவர் அறுக்கும்போது வேதனை தெரியாமற் கிடக்கிருன். அவ்வாறே அருள் பெருதபோது சிறிய இன்னலேயெல்லாம் கண்டு அஞ்சுப வனே இறைவன்பால் அன்புடையவனகி அவனருளேப் பெற்றுவிட்டால், எது வந்தாலும் அஞ்சாமல் வேதனை உருமல் வாழ்வான். . . . . - ... - அத்தகைய அன்பர்கள்."ஊழ்வினை வந்து அடைந்தால் என்ன? அதற்கு கான் அஞ்சேன்” என்று சொல்வார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர் திருங்ாவுக்கரசு சுவாமிகள். . -

'சுவாமி, ஊழ்வினைக்கு நீங்கள் அஞ்சமாட்டீர்களா? மாட்டேன். இந்த உலகில் யான் வாழுமளவும் ஊழ் வினை வந்தடையும் என்பதை அறிவேன். வந்தால் என்ன? எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை.

சூழ்உலகில் ஊழ்வினவந்து உற்ருல் என்னே?

←a5 #

'உங்களுக்கு அத்தகைய தைரியும் வரக் காரணம் என்ன?” 演 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/81&oldid=610139" இலிருந்து மீள்விக்கப்பட்டது