பக்கம்:பேசாத நாள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினே வந்தால் என்ன? 77

உணராதவர்கள் வானவர்கள். ஆனலும் கடலில் கஞ்சு எழுந்தபோது அவர்கள் யாவரும் உறவாகி ஓடிவந்து வேண்டிக்கொண்டார்கள். அப்போது இறைவன் கருனே பூண்டு அந்த நஞ்சை உண்டு உய்யக்கொண்டான். அமரர் களுடைய துன்பத்தையே நீக்கின அறப்பெருஞ்செல்வ் னுக்கு நம்முடைய துன்பம் எம்மாத்திரம்? அவனே அடைந்தால் அவன் அஞ்சேல் என்று குறிப்பிப்பான். அவன் திருக்கோலத்தைக் கண்டால் அஞ்சேல் என்ற கரத்தை உடையவன் என்பது தெரியும்.”

"அப்படிக் கோலம் கொண்டு இறைவன் எழுந்தருளி யிருப்பான் என்ருல் காங்களும் அவனே அடைந்து நீரில் மூழ்கி மலர் கொய்து இட்டுக் கழலை வாழ்த்தலாமே, அவன் இருக்கும் இடம் எது?” -

"அவன் இல்லாத இடமே இல்லை. ஆயினும் புறக் கண்ணுல் கண்டு வழிபடுவதற்கு ஏற்றபடி தேவர்களைக் காக்கும் தலைவனகிய அவன் இந்த மண்ணுலகத்திலும் கரசரணுதி அவயங்களேயுடைய திவ்விய மங்கள மூர்த்தி யாகி, வழிபடுவார்க்கு அருள் சுரக்கிருன்." -

"மண்ணுலகில் அவனுடைய திவ்வியமங்கள மூர்த் தத்தை எங்கே காணலாம்?" . . . .

திருக்கோயில் தோறும் காணலாம். சோழநாட்டில் உள்ள திருவாவடுதுறையிலே அமரர் எருகிய அவனக் கண்டு தரிசித்தேன். நீங்களும் தரிசியுங்கள். அஞ்சேல் என்று அருள்வாயாக என்று வேண்டிக்கொண்டு நான் தரிசித்தேன். - -

அப்பர் சுவாமிகள் இப்படி யெல்லாம் வினவுக்கு விடை கூறவில்லை. ஆனல் இத்தகைய வினக்கள் எழுமா ல்ை, அவற்றிற்குத் தக்க விடைகளே அவர் திருவாவடு '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/83&oldid=610141" இலிருந்து மீள்விக்கப்பட்டது