பக்கம்:பேசாத நாள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பேசாத காள்

துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே நோக்கிப் பாடிய பாசுரம் சொல்கிறது.

நறுமா மலர்கொய்து நீரில் மூழ்கி

நாள்தோறும் நின்கழலே ஏத்தி வாழ்த்தித் துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் -

குழுலகில் ஊழ்வினவந்து உற்ருல் என்னே? உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட

ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண்டு உய்யக் கொண்ட ,றவா! அடியேனே அஞ்சல் என்னுய் نتين

ஆவடுதண் டுறைஉறையும் அமரர் ஏறே!

(மணம் வீசும் பெரிய மலர்களைக் கொய்து நீரிலே மூழ்கித் தினந்தோறும் நின்னுடைய கிருவடிகளேயே துதிசெய்து வாழ்த்தி, அதல்ை அது காறும் நீக்காத துன்பங்களையெல்லாம் விட்டொ ழிந்த என்னே இப்போது யாவரும் வினைகளைச் செய்யும் இவ் வுலகில் ஊழ்வினே வந்து அடைந்தால் எனக்கு உண்டாகும் துன்பம் என்ன ? தேவர்கள் இறைவனிடத்தில் உறவுடையவராய் அனைவரும் வந்து வேண்ட, ஒலிக்கின்ற அலைகளேயுடைய நீர் கிரம்பிய கடலில் எழுந்த நஞ்சை உண்டு அவர்களே உயிர் பிழைக்குமாறு செய்தருளிய அறமே உறவான அண்ணலே! அடி யேனே அஞ்சாதே என்று சொல்வாயாக; திருவாவடுதுறையில் எழுந்தளிருக்கும் தேவர்கள் தலைவனே! - - - *

மா. பெருமை அளவிலைன்றி மணத்தாலும் அழகாலும் உண்டான பெருமை. நீரில் மூழ்கி மலர் கொய்து என்று மாற்றிக்கொள்ளவேண்டும். கழல் - வீர கண்டை; இங்கே அதை அணிந்த திருவடியைக் குறித்தது; ஆகுபெயர். ஏத்துதல், ஒன்றன் சிறப்பை எடுத்துரைத்தல். வாழ்த்துதல், வாழ்க, என்று கூறுதல். துறவாத . முன்பு என்னே விட்டு நீங்காக. துறந்தேன் - விட்டொழித்தேன்.. குழ்தல் செய்தல்; சுற்றுதல் என். றும் கொள்ளலாம். என்னே - எனக்கு வரும் துன்பும் என்ன? எனக்கு என்ன கவலை என்றும் சொல்லல்ாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/84&oldid=610142" இலிருந்து மீள்விக்கப்பட்டது