பக்கம்:பேசாத நாள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினே வந்தால் என்ன? 79

உறவு - கட்பு. தேவர்கள் சில சமயங்களில் இறைவனுடைய பெருமையை எண்ணுமல் தக்கனுடைய யாகத்துக்குச் சென்றது. போல் சில செயல்கள் செய்து பகையாவதும் உண்டாதலால், உறவாகி என்றர். வானவர்கள் தனித்தனியே வந்து தங்கள் தங்கள் துன்பங்கள் போகும்படி வேண்டிக்கொள்வதுண்டு. ஆல்ை இப்போது அனேவரும் வந்து வேண்டினர்களாதலின், முற்றும் வேண்ட' என்ருர்.

அமுதம் கடைந்தது உப்புக்கடலில் என்பது ஒரு மரபு. ஆதலின் ஒலி கிரை நீர்க்கடல் நஞ்சுண்டு என் றர். அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னே' என்று அப்பரும், "காரூர் கடல் விடமுண்டு' என்று சுந்தாரும், 'தாழி தரையாகத் தண்ட உயிர் நீராகத் தடவரையே மத்தாகத் தாமரைக்கை கோவ, ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்' (சாபங்கர் பிறப்பு நீங்கு படலம், 29) என்று கம்பரும் கூறுவது காண்க.

துன்பம் துறந்தேன் என்று சொன்னலும் அந்த கிலேயினல் செருக்கு அடையாது பின்னும் பணிவுபூண்டவராகி இறைவனே நோக்கி இரக்கின்றாாதலின் அடியேனே அஞ்சேல் என்னுய்', என்றர். ஆவடுதுறை, சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் உள்ளது; அம்பிகையின் பசு உருவை இறைவன் நீக்கிய தலமாதலின் ஆ அடுதுறை என்ற பெயர் பெற்றது. ஏறு . ஆண்சிங்கம்; இங்கே தலைவன் என்பதைக் குறிக்க வந்தது.)

- இந்தப் பாடல் ஆருந் திருமுறையில் 41-ஆம் பதிகத் தில் ஐந்தாவதாக உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/85&oldid=610143" இலிருந்து மீள்விக்கப்பட்டது