பக்கம்:பேசாத நாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சமாதி

கவிதையைப் பாடுவதற்குப் பிறவியிலேயே அமைந்த ஆற்றல் வேண்டும் என்று அறிஞர்கள் சொல்வார்கள். புலமை உடையவர்கள் யாவருமே கவித்துவம் உடையவர்க ளாக இருக்க முடியாது. பழங்காலத்தில் கவித்துவம் உடையவர்களேயே புலவர் என்று சொல்வது வழக்கம்.

கவியை நுகர்வதற்கும் தனிப் பண்பு வேண்டும். கவிதை வாழ்வதற்கு இன்றியமையாதவர்கள் அதை நுகர்பவர்களே. கவிஞர்கள் ஊக்கம்கொள்வதும், மேன் மேலும் கவிமழை பொழிவதும் கவிதையை நுகர்பவர்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே அமையும். -

சொல் இல்லாமல் கவிதை இல்லே. ஆனலும் கவிதை வெறும் சொற்குவியல் ஆகாது. கல்லேக் குவித்திருக்கிற இடத்தை நாம் பார்க்கிருேம். அந்தக் குவிய வில் உள்ள கற்களே கோயில் ஆகிறது. ஆனல் அவற்றை வெறும் குவியலாகக் கொட்டின அளவில் கோயில் ஆகி விடாது. அந்தக் கற்களேயே சிற்பி ஒருவன் தன்னுடைய கற்பனேயினல் அமைக்கும் முறையில் அமைத்துக் கட்டி ல்ை கோயில் ஆகிவிடுகிறது. கற்குவியலைப் பார்க்கும் கண்ளுேடு கோயிலப் பார்த்தால் அதன் அருமை தெரி யாது. இத்தனே கற்களே அடுக்கியிருக்கிருன் என்ரு அந்தக் கோயிலுக்குப் பெருமை கூறுவது? வெறும் கல்லை மாத்திரம் பார்க்கிறவ்ர்களுக்குச் சிற்பியின் உண்மைத் திறமை தெரியவே தெரியாது.

இவ்வாறே கவிதையில் உள்ள சொற்களே மாத்திரம் பார்த்து மகிழ்பவன் கவிதையை நுகர்ந்தவன் ஆகமாட் டான். சொற்களின் குவியலைக் கண்டு மகிழ்வதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/86&oldid=610144" இலிருந்து மீள்விக்கப்பட்டது