பக்கம்:பேசாத நாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சமாதி 81

கவிதை நுகர்ச்சியாகும் என்ருல் வேறு வேறு காவியங்களைப் படிக்கவேண்டாம். ஓர் அகராதியை வாங்கி வைத்துக் கொண்டு புரட்டலாம். எல்லாக் காவியத்திலும் உள்ள சொற்கள் யாவும் அகராதியில் இருக்கின்றன. அதனல் எல்லாக் காவியங்களேயும் படிப்பதனால் உண்டாகும் இன்பம் அகராதி ஒன்றைப் படிப்பதனல் உண்டாகிவிடும் என்று சொல்லலாமா? அகராதியில் சொற்கள் இருக் கின்றன. ஆனல் கவிதை இல்லை.

சொற்களின் கட்டுக்கோப்பைக் கவிதையிலே காண் கிருேம். கல்லையெல்லாம் சேர்த்து ஒரு கட்டிட உருவ மாக்கிக் கோயிலே அமைக்கிருன் சிற்பி. அதுபோலச் சொற்களேக் கூட்டி இணைக்கும் வகையில் இணைத்துக் கவிதையைத் தருகிருன் கவிஞன். ஆகவே சொற்கள் சேர்ந்து ஒர் உருவத்தைப் பெற்று நின்ருல் கவிதையாகி விடும் என்று சொல்லலாமா? அதுவும் அன்று.

கற்களேயெல்லாம் இணைத்துக் கட்டிடமாகக் கட்டி விட்டால் கோயில் ஆகிவிடாது; அதற்குள் கடவுளின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்யவேண்டும். அப்போது தான் அது கோயில் ஆகும். தனித் தனியே உடம்பின் அவயவங்களேத் துண்டாகப் போட்டிருந்தால் அந்தக் குவியல் மனிதனுகாது. உறுப்புக்கள் அந்த அந்த இடத் தில் அமைந்து எல்லாம் இணைந்து நிற்கவேண்டும். அப்படி இணைந்து நின்ருலும் அந்த இணைப்பை உடம்பு என்று சொல்லலாமே ஒழிய மனிதன் என்று சொல்ல இயலாது. பிணத்தில் அங்கங்கள் அந்த அந்த இடத்தில் இருக் கின்றன; எல்லாம் இணைந்திருக்கின்றன. ஆலுைம் பிணம் மனிதன் ஆவதில்லை; அதற்கு உயிர் இல்லை.

அப்படியே வெறும் சொற் கூட்டம் கவிதை ஆகாது; உருவத்தோடு இணைந்த சொற்களும் கவிதை

6 * - * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/87&oldid=610145" இலிருந்து மீள்விக்கப்பட்டது