பக்கம்:பேசாத நாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . பேசாத நாள்

யாகா. முன்னையது வெறும் சொற்குவியல்; பின்னேயது செய்யுள். அதாவது ஒன்ருேடு ஒன்று தொடர்புடைய சொற்களின் கோவை. அந்தச் சொற்கோவைக்குப் பொருள் உண்டு. உரைநடையில் சொற்கள் தொடர்ந்து ஒரு பொருளைத் தருவதுபோல அந்தச் சொற்கோவையும் ஒரு பொருளேத் தரலாம். கான் பாட்டுக் கட்டினேன் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படிக் கட்டின சொற்கோவை அது. அதைக் கட்டிய செய்யுள் என்று சொல்லலாம்; பாடிய பாட்டு என்ருே கவிதை என்ருே சொல்ல ஒண்ணுது. -

பின்னே கவிதை என்பது என்ன? கவிதையின் உயிர் எங்கே இருக்கிறது? கவிதைக்குச் சொற்கள் வேண்டும்; சொல் இல்லாமல் கவிதை இல்லை. ஆனல் சொல்லளவிலே கவிதை கிற்பதில்லை. சொற்களின் கட்டுக்கோப்பாகிய உருவம் கவிதைக்கு இன்றியமையாதது; ஆல்ை அந்த உருவத்தளவிலே கவிதை கின்றுவிடுவதில்லை. அதற்கு மேலே கவிஞன் தன் உள்ளத்தே தோன்றிய உணர்ச்சி யைக் கவிதையிற் புலப்படுத்துகிருன் அதுதான் கவி தைக்கு உயிர் சொல்லும் சொல்லே இணைக்கும் திறமை யும் படிப்பினலே ஒருவனுக்குக் கிடைக்கலாம். ஆனல் உண்ர்ச்சிக்கு உருவங்கொடுத்துச் சொல்லில் வடிக்கும் ஆற்றல் கவிஞன் ஒருவனுக்குத்தான் கிடைக்கும். அது வெறும் புலமையினலே வருவதன்று. கருவிலே அருள் உடையாருக்குத்தான் வரும்.' -

கோயிலுக்குச் செல்பவன் அதில் உள்ள கற்களேயும் கட்டிட விசேஷத்தையும் கண்டு மகிழ்ந்துவந்தால் அவனேக் கோயிலுக்குப் போய்வந்தவன் என்று காம் எண்ண மாட்டோம் கட்டிடத்தை மேற்பார்வையிடுபவன் என்று தான் சொல்வோம். கட்டிடக் கலையின் இலக்கணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/88&oldid=610146" இலிருந்து மீள்விக்கப்பட்டது