பக்கம்:பேசாத நாள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கவிதா சமாதி 83

தெரிந்தவகை இருந்தாலும்கூடக் கோயிலே வெறும் கட்டிட மாகப் பார்த்தவன் கோயிலைப் பார்த்தவன் ஆகமாட்டான். கோயிலே கன்ருகப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் உள்ளே புகுந்து அங்கே எழுந்தருளியிருக்கும் மூர்த்தியைத் தரிசித்தவனே கோயிலுக்குப் போனவன் என்று சொல்லும் தகுதியுடையவன். அவன் கூடப் பக்தன் ஆகமாட்டான். கோயிலுக்குப் போவதனால் உண்டாகும் பயனே நன்கு பெற்றவனே பக்தன். கடவுளேத் தரிசனம் செய்து அந்த மூர்த்தியின் தத்துவத்தை உணர்ந்து உணர்ச்சி விஞ்சிக் கண்ணிர் ஆருகப் பொழியத் தன்னே மறக்கிறவனே கோயிலுக்குச் சென்றதன் முழுப் பயனேயும் பெற்றவன் ஆவான். -

சுந்தரமூர்த்தி நாயனர் நடராஜப் பெருமானத் தரிசித்தபோது அவருக்கு உண்டான அநுபவத்தைச் சேக்கிழார் சொல்கிருர்,

'ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் - சிச்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இக்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த

எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் கிளேத்து.

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்." . கோயிலுக்குச் சென்று வருபவர்களில் இந்த நிலையில் இருந்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்பவர் எவ்வளவு பேர்? ஆயினும் கோயிலில் சென்று தரிசிக்கும் முறையில் தரிசித் தால் இந்த மகிழ்ச்சியை யாவரும் அடையலாம் என்பதில் சந்தேகம் இல்லை. சென்று தரிசிப்பவனுடைய உள்ளத்தில்

ஒருவகைப் பசி வேண்டும். அப்போது அவனுக்கு இறைவ

னுடைய மூர்த்தி தரிசனம் முழுப் பயனையும் கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/89&oldid=610147" இலிருந்து மீள்விக்கப்பட்டது