பக்கம்:பேசாத நாள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பேசாத நாள்

கவிதையை நுகர்வதிலும் இப்படி உச்சமான கிரே ஒன்று உண்டு. சொல்லே மாத்திரம் பார்த்து நிற்பதில் பயனில்லை; சொல்லுக்கு அப்பால் அதன் பொருளே உணர வேண்டும். பொருளைத் தெரிந்துகொள்ளும் அளவோடு கின்ருல் போதாது. அதற்கும் அப்பாலே உள்ள கருத்தையும் உணர்ச்சியையும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால்கூடக் கவிதையின் முழு இன்பத்தை யும் அடைந்தவர்கள் ஆகமாட்டார்கள். அறியும் கிலே என்பது ஒன்று; உணரும் கிலே என்பது ஒன்று, நுகரும் கிலே என்பது ஒன்று. சொல்லிலே பரவிய பொருளைச் சிக்கறத் தெரிந்துகொள்வது அறியும் கிலே; சொல்லிலே பரவும் பொருளேத் தெரிந்துகொண்டு அதற்கு அப்பா லுள்ள தூய உணர்ச்சியை உணர்வது உணரும் கிலே; அந்த உணர்ச்சியைத் தெரிந்துகொண்டதன் விளைவாகத் தானும் அந்த உணர்ச்சியைச் சொந்த அநுபவத்திலே தேக்கும் கிலேயே நுகரும் கிலே. அப்போது கவிதையை நுகர்பவன் அந்தக் கவிதையைப் பாடிய கவிஞன் எந்த அநுபவத்தில் கின்று பாடினனே அந்த அநுபவத்தில் நிற்பான். பாடுவதற்கு முன் கவிஞன்பால் இருந்த அந்த அநுபவ கிறைவு அந்தப் பாட்டை உணர்ந்ததற்குப் பின் அவனிடம் உண்டாகிறது. அ. து ப வ நிறைவில் எழுந்தது பாட்டு அந்தப் பாட்டே அநுபவ கிறைவை உண்டாக்குகிறது. மரத்தில் விளைந்தது வித்து; அந்த வித்தே மரத்தை உண்டாக்குகிறது. -- -

இந்தக் கவிதையதுபவம் உள்ளப் பண்புடையவர்க ளிடந்தான் உண்டாகும்; ஒருமைப்பாடும், உணரவேண்டும் என்ற பசியும், பரிவும் உடையவர்களிடந்தான் உண்டா கும். கவிதையை நுகர்ந்த இன்பத்தைப் பொறுத்தவாையில் கவிஞனே ஆகிவிடுகிருன் ரஸிகன்: அநுபவத்தில் இருவரும் ஒத்து நிற்கிருர்கள்.கவிதையிலுள்ள சொல்லும் பொருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/90&oldid=610148" இலிருந்து மீள்விக்கப்பட்டது