பக்கம்:பேசாத நாள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சமாதி 85

எங்கோ அடித்தளத்தில் நின்று விடுகின்றன. அவற் றைத் தாண்டிய உச்சி மாடியிலே, அவற்றையெல்லாம் அஸ்திவாரமாகப் போட்டு மறைத்த உப்பரிகையிலே, இன்பத் தென்றலே துகர்கிருன் ரஸிகன். -

அந்த நிலையில் சொல்லே மறக்கிருன் பொருளை மற்க் கிருன்; பாடிய கவிகளே மறக்கிருன்; தன்னேயே மறந்து விடுகிருன். தன்னே மறந்துபோகும் கிலேக்குத்தான் துரக்கம் என்று பெயர். தியானசமாதியிலே ஆழ்ந்தவரைப் போல, அஷ்டாங்க யோகம் செய்து ஒருமுகப்பட்டவரைப் போல, இந்தக் கவிதாதுபவ சமாதியிலே அவன் ஒன்றி விடுகிருன். - - . . . .

அவன் உள்ளத்திலே அப்போது அமுது கொப்புளிக் கிறது. ஒளி பொங்குகிறது. இறைவனே கடனமிடுகிருன் இயற்கையாக உள்ள இருள் இருக்குமிடம் தெரியாமல் ஒடி ஒளிந்துவிடுகிறது.

இறைவன் கவிதா சமாதியிலே ஆழ்கிறவனுடைய உள்ளத்திலே இருளே இல்லாமல் வாங்கிவிடுகிருன், நல்ல கவிதைகளையே தனக்குக் கோயிலாகக் கொண்டவன் இறைவன். அழகிய பொருள்களெல்லாம் தானுக நிற்பவன் அவன். தம்மை மறப்பவரிடம் நான் என்று வந்து விளையாடுபவன் அவன். ஆகையால் கவிதையாகிய கலப் படைப்பில் ஆழ்ந்து தம்மை மறப்பவரிடம் அவன் விளையாடுகிருன். அவர்கள் உள்ளத்தை ஒளி கிலேயமாக்கி விடுகிருன் , -

- இதை எதிர்மறை முகத்தால் அப்பர் சுவாமிகள் சொல்கிருர், - .

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்ம்ை நோக்கித்

- து.ாங்காதார் மனத்துஇருளே வாங்கா தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/91&oldid=610149" இலிருந்து மீள்விக்கப்பட்டது