பக்கம்:பேசாத நாள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பேசாத நாள்

உள்ளன. திருஞானசம்பந்தரும் வாகீசப் பெருமானும் எப்போதும் தொண்டர் கூட்டம் தம்மைச் சூழத் தலங் தோறும் சென்று சென்று எங்கும் சிவமணம் கமழச் செய்தார்கள். திருக்கூட்டத்தில் உள்ள பக்தர்கள் இறை வன். புகழைப் பாடி ஆடிக் கண்ணிர் மல்கத் தம் வசமிழந்து இன்புற்ருர்கள். . -

இறைவனுடைய புகழாக அன்பர்கள் பாடிய பாடல்கள் பல உண்டு. ஆதலின் பாடுவாருக்குப் பாட்டுப் பஞ்சம் இல்லே.

அன்பர்கள் பலவகையான பாடல்களையும் பாடி மெய்ம்மறந்து ஆடிக் கீழே விழுந்து எழுவார்கள். தாயைப் பிரிந்த கன்று போலப் புலம்புவார்கள். தம் குறைகளை யெல்லாம் இறைவன்முன் எடுத்துச் சொல்லிப் புலம்பு வார்கள். மனம் பாகாய் உருகத் தம்மை எளியராகவும் பாவியராகவும் சொல்வி கைந்து அரற்றுவது பக்தி கிலே களில் ஒன்று. அழுங் குழந்தையின் பசியைப் போக்கும் தாயைப்போல இறைவன் அவர்களுடைய பாவங்களேயெல் லாம் போக்கி அருள் வழங்குவான். *

மேலும் மேலும் பாவ்த்தைச் செய்து சுமையாகச் சுமக்கும் இயல்பு உடையவை உயிர்கள். இறைவன் ஒரு வனே அந்தப் பாவத்தைப் போக்கும் ஆற்றல் உடையவன். பாவத்தைச் செய்தவர்கள் அவற்றை உதறிவிட முயன்ரு லும் போகா உள்ளம் கரைந்து பாடியாடும் பக்குவத்தை யுடைய அடியார்களிடம் உள்ள பாவங்கள் கரைந்து போகும் வண்ணம் தன் அருளாணேயினலே செய்யும் சக்திமான் இறைவன் ஒருவன்தான். . பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப் - . * . . பணித்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பானே. - . . . . - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/94&oldid=610152" இலிருந்து மீள்விக்கப்பட்டது