பக்கம்:பேசாத நாள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதா சமாதி 89.

(பலவகைப் பாக்களேயும் வாய் கிரம்பப் பாடிக் கூத்தாடிக் இழே விழுத்து பணிந்து எழுந்து, தம் குறைகளே எடுத்துக் சொல்லித் தன்னே அணுகினவர்களுடைய பாவத்தைப் போக்கும் ஆற்றலுடையவனே. '

பற்பா என்றது இறைவனேப்பற்றிய பாக்களே; தூய்மை யான கினேவை உண்டாக்கும் தெய்வ மணம் கமழும் பாக்களே. பணிந்து . கீழே விழுந்து வணங்கி. குறைந்து - தம் குறைகளே எடுத்துச் சொல்வி; தம்மை மிக்க இழிந்தவர்களாகக் குறைத்துக் கூறி என்றும் சொல்லலாம். போக்ககிம்பான் - போக்கும் ஆற்றலை உடையவன். கில் என்பது ஆற்றலைக் குறிக்கும் இடைச் சொல்.)

பல பாக்களேயும் தெரிந்துகொண்டிருக்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு நாணம் தடையாக நிற்கும். இறைவனுடைய பெருமையையும் தம்முடைய சிறுமையையும் நன்கு உணர்ந்தவர்களுக்கு அந்த காணம் தடையாக நில்லாது. அதிர்ந்து பேசாமல் இருக்கும் ஒரு பெண் வீட்டில் தீப்பற்றில்ை தன் தொண்டை கிழியத் தித்தித்தி என்று காணத்தை விட்டுக் கதறுவதுபோல, தமக்கு அமைந்த பிறப்பு இறப்பு என்னும் கடுந்துன் பங்களே உணர்ந்தவர்களுக்கு இறைவன் முன் வாயாரப் பாடுவதற்கு காணம் உண்டாகாது. இந்த கிலே பக்தி முறுக முறுக உண்டாவது, . -

வாயாரப் பாடும் கிலேக்கு அடுத்தது ஆடும் கிலே.

உடல் மறந்து கூத்தாடுவது அன்பர்களுக்கு இயல்பு. ஏதேனும் ஓர் உணர்ச்சி விஞ்சிவிட்டால் அது உடம்பிலே மெய்ப்பாடாகத் தோற்றும் பக்தி உணர்ச்சி விஞ்சின போது ஆடுவார்கள். ஆடியவர்கள் அவசமாகி விழு. வார்கள். விழுந்து எழுந்து புலம்புவார்கள். இந்த நிலைகளே முறையாக அப்பர் சுவாமிகள் எடுத்துச் சொல்கிருர், .

×

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/95&oldid=610153" இலிருந்து மீள்விக்கப்பட்டது