பக்கம்:பேசாத நாள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9C) பேசாத நாள்

கவிதா சமாதியிலே துரங்குகிறவர்களின் உள்ளிருளே வாங்கி ஒளியை கிரப்புபவனும், அப்பர் சுவாமிகளே ஆண்டுகொண்டவனும், வாயாரப் பாடி ஆடும் பக்தர்களின் பாவத்தைப் போக்குபவனும் ஆகிய சிவபெருமான் கீழ் வேளுர் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கிருன். மேல் திசையிலே வேறு சில வேளுர்கள் உண்டு. இது கீழ்த் திசையிலே இருப்பதால் கீழ் வேளுர் என்ற பெயரை உடையதாயிற்று. அங்கே இருந்து தன் அருளாட்சியை கடத்தும் பெருமானுக்குக் கேடிலியப்பன் என்பது திரு காமம், அகூடியலிங்கம் என்பது வடமொழிப் பெயர். அவன் எக்காலத்தும் அழிவே இல்லாதவன்; கேடு இலி. அவன் தனக்கு ஒரு கேடும் இல்லாமல் இருப்பது பெரிதன்று. அவனே நாடி அடைகின்ற அன்பர்களும் கேடு இல்லாத கிலேயை அடைவார்கள். காந்தத்திலே தேய்த்த இரும்பும் காந்தமாகிறது. மின்சாரக் கம்பியோடு இணைந்த வெறும் கம்பியும் மின்சாரக் கம்பி ஆகிவிடுகிறது. சிவனேடு இணேந்த சீவனும் அழியாத நிரதிசய இன்ப நிலையை அடை கிறது. கேடிலியை நாடிச் செல்லும் அவர்களும் கேடு இல்லாதவர் ஆகிருர்கள்.

கீழ்வேளுர் ஆளும் கோவைக்

கேடிலியை நாடும்அவர் கேடி லாரே.

- (கீழ்வேளுரில் இருந்து அருளாட்சி புரியும் தலைவனைக் கேடிலியப்பனே மனத்தாலே காடிச் சென்று அடைகின்ற அவ் வன்பர்கள் கேடு இல்லாதவ ராவர். -

கோ - தலைவன். கேடு என்றது பிறப்பும் இறப்பும் உடைய ாாகி கிற்கும் கிலேயை. கேடு இலார் என்றது என்றும் அழியாத இன்ப வீட்டைப் பெற்று நிற்பர் என்றபடி.) -

கவிதையிலே ஊன்றி நின்று அதன் வழியே இறைவன் பெருமையை உணர்வதும், கவிதையை வாயாரப் பாடியாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_நாள்.pdf/96&oldid=610154" இலிருந்து மீள்விக்கப்பட்டது