பக்கம்:பேசாத பேச்சு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 . . . பேசாத பேச்சு

விடுவான். ராவணன் உள்ளத்தே கோபம் வந்துவிட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் அறிவும் குடி போய்விடும். 'உன் தங்கை மூக்கை யாரோ அரிந்துவிட்டார்" என்று ஒரு அதன் வந்து சொன்னல், ராவணனுக்கு உடனே கோபம் வந்துவிடும். அந்தக் கோபம் ஒரு கணமாவது அவனைச் சிந்திக்க விடாமல் உடனே தொழிற்படும்; ாாட்சச விளைவாகத்தான் தொழிற்படும். உடனே அந்தக் . அாதனைப் பிடித்து அவன் நாவை ராவணன் துண்டித்து விடுவானும் கோபத்துக்கு எத்தனை சுதந்தாம் பாருங்கள். அறிவுக்கோ, பொறுமைக்கோ அந்தக் கணத்தில் அங்கே வேலையில்லை. . . "

“ன்ங்கள் அண்ணனர் இப்படிப்பட்டவாக்கும்!” என்று சூர்ப்பனகை சொல்கிருள்.

ஆக்கரிய மூக்குஉங்கை அரியுண்டாள் என்ருரை . நாக்கரியுந் தயமுகஞர். . (உன் தங்கை, ஆக்குவதற்கரிய மூக்கு அரியப்பட்

டாள் என்று யார் சொன்னரோ அவர் காக்கை உடனே அரிந்துவிடும் பத்து முகம் படைத்த ராவணனர். உங்கைஉன் தங்கை.) . .

கோபம் முனிவர்கள்பால் தோன்றும்போது அதன் பின்னே தவவலி நிற்கிறது. அதன் விளைவு குற்றம் செய்தவனுக்குத் .. தண்டனையாக முடிகிறது. ாாட்சசன் ப்ால் தவழும்போது அதுவும் ராட்சச வேலும் தரித்துக் கொள்கிற விசித்திரத்தைக் கம்பர் இவ்வாறு காட்டி யிருக்கிருர், குற்றவாளி, குற்றவாளியல்லாதவர் என்ற வேற்றுன்மக்கு அங்கே இடம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/109&oldid=610264" இலிருந்து மீள்விக்கப்பட்டது