பக்கம்:பேசாத பேச்சு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் கோபம்

தவ முனிவர் கோபத்தால் விளைந்த விளைவும் அரக்க ஜாதியின் சினத்தின் கோலமும் மெய்ப்பாடுகளால் ஒரே மாதிரி இருந்தாலும், முன்னது தவமென்னும் ஆற்றலுக் குரிய கம்பீரம் உடையது. பின்னது தாமச இயல்பில்ை அமைந்த கொடுமையை உடையது. இாண்டும் தீமையை விளைவிப்பது. முனிவர் கோபம், அக் கோபத்துக்குக் காரணமானவரை ஒறப்பது: அாக்கர் கோபம் இன்னு ாைத்தான் துன்புறத்தும் என்ற வரையறையில்லாமல் மதம் பிடித்த யானே போலக் கண்ட கண்ட இடத்திலெல் லாம் அழிவை உண்டாக்குவது. - -: கோபம் வந்தால் அது செயலாக விளைய வேண்டிய அவசியம் இல்லை. எதோ ஒரு செயல் முன் நிகழ அது கண்டு ஒருவனுக்குக் கோபம் உண்டாகிறது. முன்னலே நிகழ்ந்த அச்செயல் காரணமாக கிற்க, அதன் காரியமாகக் கோபம் விளைகிறது. அந்தக் கோபம் காரணமாய் கிற்க மீட்டும் ஒரு விளைவு நிகழ்வதை ஆற்றலுடையாரிடமும் அறியாமையுடையாரிடமும் பார்க்கலாம். ஆனல் அறி. வுடையவர்பால் கோபம் உண்டாவது அரிது. அப்படி. உண்டானலும் அதற்குப் பின் விளைவு பெரும்பாலும் இராமல் ஆறிவிடும். மனித இயற்கையில்ை கோபம் உண்டானலும் அது மாறிவிடுவதுதான் உயர்ந்தோர்பால் நிகழும் நிகழ்ச்சி. . . . . -

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்ருேர் சினம் என்ற பாட்டு இதைக் குறிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/110&oldid=610265" இலிருந்து மீள்விக்கப்பட்டது